கோச்சடையான் வெளியான 3 நாட்களில் 42 கோடி வசூல் செய்ததாக தகவல் வந்தது.
உலகம் முழுவதும் நல்ல வசூலை தான் தந்துள்ளதாம், ஆனால் பாலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்னும் அதிர்ச்சி செய்தி ஒன்றை தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியது “குறுகிய நேரத்திலும், பட்ஜெட்டிலும் ‘கோச்சடையான்’ படத்தினை பண்ணினோம். இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம். இதன் அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.
மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தினை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் ‘கோச்சடையான்’ படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் படம் தமிழ் நாட்டில் வெற்றி பெற்றால் போதும் ,வெளி மாநிலங்களில் தேவை இல்லை …இந்த படம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க பட்டுள்ளது ,பார்த்து விட்டு சொல்கிறேன் ,குழந்தைகளின் எதிர்காதிர்க்கு ஓர் சிறந்த அறிவியல் தமிழனுக்கு நல்ல பெயர் வாங்கி தனது இருக்கிறது ,,ஜப்பானிலும் சூப்பர் …
நானும் குடும்பத்தோடு பார்த்து விட்டே சொல்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது. அதோடு தமிழ் படம் என்ற முறையில் சற்று வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. குரிஒப்பாக பிள்ளைகள் மிகவும் ரசித்து பார்த்தனர். தேவை இல்லாத காதல்-கத்தரிக்காய் காட்சிகள் ஏதும் இல்லை. நன்கு தைரியமாக குடும்பத்துடன் சென்று காணலாம். திரி டியும் ஒரு புதிய அனுபவமே! தொடரும் தங்கள் புதுமை படைப்பு … அன்பு ரஜனி அவர்களே.!!