கொலவெறி பாடல் ஹிட்டானதும் அனிருத்தை இசையமைக்க அணுகியவர்களைவிட, அவரை நடிக்கக் கேட்டு அணுகியவர்களே அதிகம். கண்டேன் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் அனிருத்தை தங்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக அணுகியபோது, அவருக்கு ஒரு கோடி சம்பளம் தரவும் முன் வந்தது. அனிருத்தோ தேடி வந்த பட வாய்ப்பை ஸாரி சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்.
அதன் பிறகும் எத்தனையோ பட வாய்ப்புகள் அவரை முற்றுகையிட்டன. கடைசியாய் ஆகோ என்ற படத்தில் நடிக்கவும் அவருக்கு ஆஃபர் கொடுத்தனர்.
கதை சூப்பராக இருக்கிறது. ஆனால் நான் நடிக்க மாட்டேன் என்ற சொன்ன அனிருத், அந்தப் படத்திற்கு இசையமைக்க மட்டும் ஒப்புக்கொண்டார்.
இப்படி தன்னைத்தேடி வந்த கதாநாயகன் வாய்ப்புகளை எல்லாம் மறுத்து வந்த அனிருத், தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படத்தின் பெயர் சான்ஸே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மகாபலிபுரத்தில் தொடங்கியது. முதல்நாள் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.