அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஹாலிடே’ படம் இந்தித் திரையுலகில் பலத்த வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த படம், படம் வெளியான வாரக் கடைசியில் 40 கோடி ரூபாய் வசூல் செய்தது.
தற்போது முதல் வாரத்தில் 68 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் தொகை இந்தியாவில் மட்டும் வசூல் செய்யப்பட்ட தொகையாகும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டுவிடும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறதாம். ‘கஜினி’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் சில புதிய படங்கள் வெளிவந்தாலும் அவை ‘ஹாலிடே’ படத்தின் வசூலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையாம். தொடர்ந்து பல இடங்களில் நல்ல வசூலைக் குவித்து வருகிறதாம்.
இந்த படத்தின் வசூலைத் தொடர்ந்து இயக்குனர் முருகதாஸுக்கு மேலும் இந்திப் படங்களை இயக்கும் வாய்ப்பு வருகிறதாம். சில முன்னணி நடிகர்கள் முருகதாஸை தங்கள் படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், முருகதாஸ் தற்போது விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருவதால், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே மேற்கொண்டு, எந்த ஹீரோவுக்கு சம்மதம் தெரிவிப்பார் என்று தெரியும் என்கிறார்கள். தமிழ் இயக்குனர்களுக்கு தற்போது இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
100 கோடியை நோக்கி ‘ஹாலிடே ! எவன் அப்பன் வீடு சொத்து !? டேய் தமிழர் நந்தா எங்கடா போயிட்டே ,வந்து சொல்லுடா ,இல்ல வந்து தாக்குடா