ஒரேநாளில் பிறந்த இரண்டு மாமேதைகள் தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளின் மூலம் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து வருபவர் கண்ணதாசன் அவர்கள்.
வாழ்க்கையில் சோர்ந்து போகும் பலருக்கும் இவரது பாடல்கள் தான் டானிக்காக இருந்து வருகிறது. இன்று தமிழ் போற்றும் மற்றுமொரு கவிஞன் வாலி.
இவர் தன் வாழ்நாளையே வெறுத்து இந்த சினிமாவே வேண்டாம் என்று சென்ற போது, ஒரு டீக்கடையில் ‘மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா’ என்ற பாடல் வரியை கேட்டு தான் மீண்டும் சினிமாவில் வெற்றிபெற முயற்சி செய்தாராம்.
தன் வாழ்வின் பெரும்பகுதியில் நாத்திகனாக இருந்து, பின் இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நாவலின் வாயிலாக இறைவனை புரிந்துகொண்டார்.
பாடல்கள் மட்டுமின்றி ’ஏசு காவியம்’, ‘அவள் ஒரு இந்து பெண், வனவாசம் என காலத்தால் அழியாத நாவல்களை படைத்துள்ளார்.
இதேபோல் பாடலின் வரிகள் இவை இல்லையெனில் வெறும் காகிதங்களாக தான் இருக்கும், அதன் பெயர் தான் விஸ்வநாதன், மன்னிக்கவும் இசை. எனக்கு இசையும், விஸ்வநாதனும் வேறு ஆளாக தெரிவதில்லை. இவரால் தான் ஒரு மாநிலத்தில் தலையெழுத்தே மாறியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.தன் பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காது நிழைத்திருக்கும் ’புரட்சி தலைவர்’ எம்ஜிஆர் அவர்களுக்கு 75% படங்களுக்கு இசையமைத்தது என்றால் இவர் தான்.
கண்ணதாசன் வரியை கேட்டு மீண்டும் முயற்சித்த வாலிக்கு, வாழ்க்கையின் ஒலியாக இருந்தவர் விஸ்வநாதன் அவர்கள் தான். இதை அவரே ஒரு முறை ‘ நான் விஸ்வநாதன் அண்ணனை பார்ப்பதற்கு முன் சோற்றுக்கே வழியில்லை, பார்த்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கண்ணதாசனும்-விஸ்வநாதன் அவர்கள் கூட்டனியில் ’ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், என் கடமை, தங்கப்பதக்கம்’ போன்ற பல படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு பாடல் வரிகள் இல்லாமல் முழுமையடையாது, அதேபோல் இசையில்லாமல் வரிகள் உயிர் பெறாது. அதனால் தான் கலைத்தாய் இருவரையும் ஒன்றாக படைத்தார் போல!இதுபோல் மாமனிதர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்றும் ‘சினி உலகத்திற்கு’ பெருமை தான்.
வaழ்க 2 jambavans
“அர்த்தமுள்ள இந்து மதம் ” எழுதி இறைவனை புரிந்து கொண்டாரா
அல்லது இறைவனை புரிந்து கொண்டு அர்த்தமுள்ள இந்து மத
நூலை எழுதினாரா ? வாசகர்கள் மீண்டும் ஒருமுறை கட்டுரையை
படித்துவிட்டு பிறகு நான் எழுதியதை படிக்கவும்.
கண்ணதாசன் திரை உலகிற்கு செல்லாமல் இருந்திருந்தால் அவர் ஒரு சித்தாந்தியாக மாறி இருப்பார். அவரின் பல தத்துவ பாடல்களில் சித்தாந்தத்தின் சிந்தனைகள் உள்ளடக்கி இருப்பதை சித்தாந்தம் அறிந்தவர்களுக்குத் தெரியும். ‘வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்’ என்பது போல அவரின் வாழ்க்கை அனுபவங்களே அவரை ‘அர்த்தமுள்ள இந்து மதத்தை’ எழுத வைத்தது என்றிடலாம். துன்பங்கள் அவரை வாழ்க்கையின் எல்லைக்கே இட்டுச் செல்ல அங்கே இறைவனின் திருவிளையாடலைக் கண்டு மீண்டு வந்ததிலேயே ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தோன்றியது ஆசாமி அவர்களே.