கத்தி திரைப்படத்தை நாம் அனுமதிக்க போகின்றோமா ? இல்லை அடித்து விரட்ட போகின்றோமா ?

hqdefaultகத்தி திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளன. குறித்த திரைப்படத்தில் விஜய் நடிக்கின்ற போதும் அதன் தயாரிப்பு லைக்கா நிறுவனம் என்பதால் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் சிறீலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டுக்காக தமிழினப் படுகொலையாளன் மகிந்த ராஜபச்சவுக்கு இரண்டாவது பெரிய நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறது.
இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிக்கடி சிறீலங்காவுக்கு இரகசியப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு சிறீலங்கா செல்லும் இவருக்கு விடேச அதிரடிப் படையினர் பெரும் வரவேற்பையும் பாதுகாப்பையும் வழங்குகின்றனர். அத்துடன் சிறீலங்கா வான்படையினர் உலங்கு வானூர்த்தி மூலம் உள்ளூர் உல்லாசப் பறப்புப்களை மேற்கொண்டமையும் நிழற்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தன.

சிறீலங்காவில் தொலைபேசி மற்றும் சிறீலங்கா ஏயார் லைன் நிறுவனங்களில பெரும் முதலீகளைச் செய்துள்ளது இந்த நிறுவனம். மகிந்த கும்பலின் மிதங்கும் ஆயுத வியாபரம் மற்றும் கறுப்பணங்களை சலவை செய்தல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கத்தி திரைப்படத்தை நாம் அனுமதிக்க போகின்றோமா ? இல்லை அடித்து விரட்ட போகின்றோமா? என தமிழகத்தில் உள்ள தமிழீழ உணர்வாளர் கலந்தாலோசிக்கவுள்ளனர். இதேநேரம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் இது தொடர்பிலான எதிர்ப்புகள் வலுவாகி வருவதாகவும் அறிய முடிகின்றது.