நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

suruli_manohar_001நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ‘ இயக்குனர்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார்.

சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.