காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘49 ஓ’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தை கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதையம்சம் இதில் காணப்பட்ட போதிலும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக வந்து அவர்களது பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடவுள்ளனர்.
மூத்தவர்களை மதிக்கதெரியாத, மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தும் இவர் நடிக்கவில்லையென்று யார் அழுதார்கள் ? இவரால் இளைய சமுதாயம் சீரழிந்தது போதும் .
வாங்க ஐயா..நீங்க வந்தாதான் காமெடி என்ற போர்வையில் முகம்சுளிக்க வைப்போர் கொட்டம் கொஞ்சம் அடங்கட்டும்.ஏதோ அவர் மட்டும் தான் கீழ்தரமாய் பேசுவது போல்…….
மிக கீழ்தரமான வார்த்தைகளா ? யார் சொன்னது ,நீங்க மட்டும் என்ன,,, கோச டப்பாக்கள ,உங்க முதுக திரும்பி பாருங்கடா
நீங்கள் ஒரு திரைப்படத்தில் பேசிய வசனத்தை சிறிது மாற்றம் செய்து படித்தால் எங்களுடைய நாட்டின் தற்போதைய சூழ்நிலையை பிரதிபலிக்கிறது :-
ஓட்டை பற்றி நீ பேசாதைய்யா !!! ஒட்டு இவனுங்க சும்மாவய்யா போட்டாங்க !!! BRIM வாங்கிட்டுதான்யா போட்டாங்க !!! டேய் ஓட்டை நீங்க போட்டேனுன்னு சொல்றதைவிட ஓட்டை வித்தேன்னு சொல்லுங்கடா !!! இன்னும் 5 வருஷத்திற்கு ஓட்டை பற்றி பேச யோக்கிதையே இல்லைடா !!! வேணும்னா அடுத்த எலேக்க்ஷனுக்கு சாமி BRIM தொகையை கூட்டி கொடுங்கன்னு கெஞ்சுங்க !!! நாங்க செய்யுறோம் !!! அது ஜனநாயகம் !!! மக்களாட்சி !!!
யோவ் நீ சும்மாயிருய்யா என்னமோ ஓட்டை நீதான் கண்டுபிடிச்ச மாதிரி பேசுற !!! வெள்ளைக்காரன் கண்டுபிடுச்சான் !!! போகும்போது போனால் போகுதுன்னு கொடுத்துட்டு போய்ட்டான் !!! ஒட்டுன்னா என்னான்னு போட்டவனுக்கு தெரியாது !!! வாங்குன இவனுக்கு தெரியாது !!! நடுவுலே நீயேன்யா குழப்புற !!!
ஓட்டுன்னு ஒன்னு இருக்க்கிரனலதானே இவங்கள் எல்லாம் சட்டம் பேசுகிறாங்க !!! ஓட்டே வேண்டாம் !!! எலேக்க்ஷன கான்செல் பண்ணு !!! மன்னராட்சி கொண்டு வந்துடுவோம் !!! நீ ராஜா !!! நான் மந்திரி !!! அப்புறம் உன்பிள்ளை ராஜா !!! என்பிள்ளை மந்திரி !!! அப்படியே பரம்பரை பரம்பரையாய் வந்திடுவோம் !!! எவனாவது கேள்வி கேட்டானுங்கனா உள்ளே புடுச்சு போட்டுடுவோம் !!!