அவரை தனியாக காமெடி பண்ண சொல்லுங்க பார்ப்போம்: வடிவேலுவை சீண்டும் சிங்க முத்து

நடிகர் வடிவேலுவும், சிங்கமுத்தும் ஒருகாலத்தில் காமெடியில் கலக்கினர். இருவரும் இணைந்துநடித்த பலபடங்கள் இன்றும்பேசப்படுகின்றன. இந்நிலையில் திடீரென ஒருநாள் வடிவேலு சிங்கமுத்து மீதுநில மோசடி புகார்கூறினார். இதையடுத்து இவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தற்போது சிங்கமுத்து தனியாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். வடிவேலும் தனியாக நடிக்கிறார்.

இந்நிலையில் வடிவேலு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிங்க முத்து, கூறியதாவது, பங்காளிக்கு (வடிவேலு) கையில படமே இல்லை. நான் நடிச்ச 11 படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 25 படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்பவும் நான் பிசியான காமெடி நடிகன் தான்.வடிவேலு காமெடியில பெருசா சாதிச்சிட்டதா சொல்றாங்க. அவர் ஒண்ணும் தனியா சாதிக்கல. நாங்க பத்து பேர் சேர்ந்து யோசித்து செய்தோம்.

கதைக்கு தக்கபடி யாருக்கு என்ன கேரக்டர்? யார் எப்படி நடிக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம். அது ஹிட்டாச்சு. இப்போது வடிவேலுவை தனியாக காமெடி பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பார்க்க ஆள் இருக்காது.என்னையும் சில பேரு ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. என்னோட உயரம் எனக்குத் தெரியும். ஹீரோன்னா பைட் பண்ணனும், டான்ஸ் ஆடனும், அதெல்லாம் இந்த வயசுல செய்ய முடியுமா. தேவையில்லாம ரிஸ்க் எடுத்து எதுக்கு சிலபேர் மாதிரி இருக்கிறதையும் கெடுத்துக்கணும், என்கிறார் சிங்கமுத்து.