காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் ‘தூய்மை இந்தியா’ என்கிற திட்டத்தை துவங்கி வைத்தார்.
அத்துடன் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் அமீர்கான், சல்மான்கான், கமல் ஹாசன், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், சசிதரூர், அனில் அம்பானி, மிருதுளா சின்ஹா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். மோடியின் இந்த அழைப்பை கமல் ஹாசன், அமீர்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்றுக்கொள்வதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.
மேலும் கமல் ஹாசன் கூறும்போது, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுவேன் என்றும் இந்த இயக்கத்தில் 90 லட்சம் பேரை இணைப்பேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள். ‘ஜெய் பாரதம், தூய்மை பாரதம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



























நல்ல திட்டத்துக்கு இணைந்தால் நல்லதுதான். மோடிக்காக இணவதாக இருந்தால் தப்பு. நடகர்கள் இப்போதெல்லாம் வெளியிலேயும் பிரமாதமா நடிக்கிறாங்க. ஊழல் ஒழிப்புக்கு அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து இணந்த அதே கையோடு ஜெயா ஊழலில் உள்ளே இருக்கிறதற்காக எதிர்ப்பு தெரிவித்து ஒரு நடிப்பு நடித்தீர்களே அதுதான் உண்மையான நடிப்பு. அடுத்து அம்மா ஜாமீனில் சட்டப்படியே வெளிவரலாம். அதற்கும் உங்களின் போராட்டத்தினாலும், செய்த பூஜைகளினாலும் அம்மா … வீரத்திலகம்…. மக்கள் முதல்வர்…( அப்போ… பன்னீர் செல்வம் மிருகங்களுக்கு முதல்வரா? ). தடைகளை உடைத்த வெற்றி மங்கை… என்று ஒரு நடிப்பு நடிக்கத் தயாராக இருக்கவேண்டுமே… அவதாரம் ரெடியா? பாவமய்யா ஏதுமறியா அப்பாவி மக்கள்!
ஒரு காலத்தில் மோடியின் தலைமையில் பல முஸ்லிம்கள் கொல்லபட்டனர் .அது சரி ,TAN SRI சூர்யா அவர்களே தமிழ் ஈழம் மக்களுக்க ஏன்னா செய்தீர்கள் ? MGR போல் கோடிகணக்கில் பணம் கொடுத்து உத்வேநீர்களா ? இல்ல MGR போல் ரகசியமாக பிராபாகரனுக்கு ஆயுதம் அனுப்பி உதவிநீர்களா ? தூய்மை இந்திய என்னும் திட்டத்தில் இணைந்து தமிழர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கு என்னாத்த அப்படி செய்ய போகிறீர்கள் ? கன்னட காரன் ரஜினியாவது ஈழ மக்களுக்கி 10 லட்சம் கொடுத்து உதவினார் .எந்த தமிழனாவது MGR ரையும் ரஜினியையும் தவிர ஈழ மக்களுக்கு பணம் உதவி செய்து இருக்கிறார்களா .உதவி செய்தவர்களையே ஏளன மாக பேசுகிறார்கள் சில தமிழர்கள் .அது சரி உங்க வேலை என்ன ? நடிப்புதானே ,அதை போயி முதலில் கவனியுங்க ..அரசியலில் மூக்கை நுழைக்காதீர்கள் .யாரு இந்த மோடி ??? அந்த கருப்பு தினதன்று பதவி ஏற்பு விழாவில் மரியாதை உரிய மாண்பு மிகு ,பொன்மனச்செம்மல் TAN SRI டூளீ யாங் மாஹா MULIA அதிபர் ராஜபக்சா வை வர வலைதாரே அந்த மோடியா ? வெக்கமாக இல்லையா சூரிய உனக்கும் உங்க அப்பனுக்கும் ! தமிழ் இன எதிரிடை வர வளைத்த இந்த மோடியின் தூமை இந்திய திட்டத்தில் கலந்துக்கொல்வதர்க்கு ???
சூரியா அவரின் முடிந்ததை செய்கிறார் தன் நாட்டுக்கு,எவ்வளவோ பிள்ளைகளை படிக்கவைக்கிறார்,அரசு,அரசுக்குத்தான் உதவும்,ஞாயம் கேட்கலாம் அதற்காக போறுக்கு ஏற்பாடா செய்யமுடியும்.சிறுப்பிள்ளை தனமா இருக்கே.உயரந்தோர் என்றும் உயர்வாகவே சிந்திப்பர்.ஒரு அயோக்கியனை திராவிடனை ஈ.வெ.ர.நாய்கண்ணை ஆதறிக்கும் தமிழன் என்பவர்க்கு ராமர் பாலத்தை பாதுகாக்க முன்வந்த வீரபெண்மனியை விமர்ச்சனம் செய்ய எந்த தகுதியும் கிடையாத.வாழ்க நாராயண நாமம்.
காயீ… உன் இனத்துக்காரி திருடியா இருந்தாலும் ஆதரிக்க வேண்டுமா? ஊர் பணத்தை , ஏன் கங்கை அமரன் உழைத்து சம்பாதித்த 22 ஏக்கர் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிய பகல் கொள்ளைக்காரி பார்பனத்தி என்பதால் ஆதரிக்கிறாயா? ராமர் பாலமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை. தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் ஆரியப் பித்தலாட்டம் ராமன் பாலம். இதெல்லாம் தமிழியக் குஞ்சிகளுக்கு வலிக்காது. ஆரியன் அடிவயிற்றில் கைவைத்தாலும் விரல் சப்பிக்கொண்டிருப்பான் தமிழன். திராவிடம் என்று பேசினால் போதும் மேலும் கீழுமாக குதிப்பான். இந்த சந்தடியில் சிந்து பாட வந்திடுவான் ஆரியக்கூட்டம்.
ஒரு வேளை சூர்யாவுக்குச் சில நல்ல நலத்திட்டங்கள் இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏழை மாணவர்களுக்காக பல லட்சங்கள் செலவு செய்கிறார். இந்தத் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கக்கூஸ் இல்லாத கிராமங்களில் கக்கூஸ் கட்டிக் கொடுக்கலாம். நல்லது செய்தால் நல்லது தானே!
யான் அறிந்தவரை சூர்யா அவருடைய சக்திக்கு உட்பட்ட வரையில்
நலத்திட்டங்களை செய்வது பெரிதும் போற்றத்தக்கது .
வெளி ஆர்ப்பாட்டம் இல்லா நிகழ்வு …பலர் அறிய வாய்ப்பில்லாமல்
இருக்கலாம் .
அவரை அறியாமல் தூற்றுவது நன்மக்களுக்கு அழகல்ல !