தீபாவளியன்று கத்தி படம் ரிலீசானது. தமிழகம் முழுவதும் 450 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்காவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
எல்லா தியேட்டர்களிலும் தீபாவளியன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் ஒரு நாளில் மட்டும் ரூ.15 கோடியே 40 லட்சம் வசூல் ஆனது. இது சாதனையாக கருதப்படுகிறது. கர்நாடகாவில் மட்டும் 102 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம், 2 நாட்களில் ரூபாய் 3.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் படத்துக்கான மொத்த செலவும் வசூலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சதீஷ், நீல் நிதின் முகேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.