விஷால், ஸ்ருதிஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘பூஜை’ திரைப்படம் தெலுங்கில் ‘பூஜா’ என்ற பெயரிலும் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமான இந்தப் படம் தெலுங்கில் பி அன்ட் சி திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து விஷால் சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் படத்தின் சக்சஸ் மீட்டையும் நடத்தியிருக்கிறார்.
இதற்கு முன் விஷால் நடித்த பல படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானாலும் இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத வரவேற்பு கிடைத்து வருவதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய விஷால் முடிவெடுத்துள்ளாராம்.
பல ஊர்களுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். படம் வெற்றி பெற்றது குறித்து விஷால் கூறியிருப்பதாவது, “என்னுடைய அப்பா இயக்குனர் ஹரியின் தீவிரமான ரசிகர். அவரது இயக்கத்தில் நான் ‘பரணி’ படத்தில் நடித்தது எனது அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சுமார் 7 வருடங்கள் கழித்து அவரது இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள ‘பூஜா’ படத்திற்கும் பல இடங்களிலிருந்தும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்திற்காக தயாரிப்பாளராகவும், நடிகராகவும் நிறையவே உழைத்திருக்கிறேன்,” என விஷால் தெரிவித்துள்ளார்.