தமிழ்த் திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்க்காற்று’ படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைப் வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து, அவர் நடித்து வெளிவந்த ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஆகிய படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று விட்டன. கடந்த வருடம் வெளிவந்த ‘சூது கவ்வும்’ அவரை ஒரு வித்தியாசமான நடிகராகவும் அடையாளம் காட்டியது. அந்த மூன்று படங்களின் மூலம் கமர்ஷியலாகவும் முன்னணிக்கு வந்த விஜய் சேதுபதிக்கு அடுத்து வந்த ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்” ஆகிய படங்கள் மிகப் பெரும் சறுக்கலாய் அமைந்தன.
ஆனால், அவருடைய நடிப்பைப் பற்றி மட்டும் யாரும் குறை சொல்லவில்லை. இருந்தாலும் மீண்டும் பழைய வெற்றியை அடைந்துவிட வேண்டும் என்று எண்ணி வரும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘வன்மம்’ படம் இம்மாதம் 21ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, “இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரௌடிதான்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை அவரே தயாரித்து நாயகனாக நடித்தும் வருகிறார். இனி வரும் படங்களாவது விஜய் சேதுபதிக்கு கமர்ஷியலான வெற்றிப் படங்களாக அமைந்து அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வருமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவர் ஒரு நல்ல நடிகர் SUPER STAARAAGA ஆனாலும் தப்பில்லை ,இவருக்கு வெற்றி நிச்சியம்