ரஜினி நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் தியேட்டரில் நடந்தது. ‘லிங்கா’ படத்தின் பாடல் கேசட்டை ரஜினி வெளியிட்டார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இதை பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ரஜினி பேசும்போது:– இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா? என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டது. முன்பு மாதிரி நடிக்க முடியாது என்றே நினைத்தேன்.
உடல்நிலை சரியானதும் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தேன். சவுந்தர்யா டைரக்டு செய்தார். அந்த படம் நிறைய அனுபவங்களை அவருக்கு கற்றுக் கொடுத்தது. நான் பணம் சம்பாதிக்கிறேன். அந்த பணத்தை சவுந்தர்யா விரயம் செய்யாமல் இருந்தாலே போதும்.
ஆனாலும் சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களை அந்த படம் சவுந்தர்யாவுக்கு புரிய வைத்தது. படம் வெளியானதும் நிறைய பேர் உங்கள் முகத்தை ஒரு காட்சியிலாவது பார்க்க ஆசைப்பட்டோம். காட்டவில்லையே என்றனர். அதைக் கேட்டதும் உடனே படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அது எளிதல்ல என்பது தெரியும்.
அரசியலுக்கு வருவது எளிது. அதுபோல் படம் பண்ணி விடலாம். ஆனால் அதை மக்கள் ஏற்பது மாதிரி செய்ய வேண்டும். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் என்னை சந்தித்து ஒரு கதை இருக்கிறது என்றார். அந்த கதையை கேட்டேன். எனக்கு பிடித்தது.
40 வருட சினிமா அனுபவம் எனக்கு இருக்கிறது. ரோபோ, சிவாஜி என்று ஒவ்வொரு படத்துக்கும் பல வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது. இந்த படத்துக்கும் அதுபோல் இடைவெளி வருவதை நான் விரும்பவில்லை. கே.எஸ்.ரவிக்குமாரிடம் 6 மாதத்தில் இந்த படத்தை முடித்தால் நடிக்க தயார் என்றேன். அவருக்கும் சிரமங்கள் இருந்தன. அவரும் யோசித்து விட்டு சரி என்றார்.
கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். அரங்குகள், சண்டை காட்சிகள், அணைப் பகுதியில் நடந்த படப்பிடிப்புகள், பெரிய டெக்னீஷியன்களை ஒருங்கிணைப்பது, படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது என நிறைய சிரமங்கள் இருந்தன. அதை எல்லாம் சந்தித்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளோம்.
படப்பிடிப்பில் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டனர். பாதுகாப்புக்கு நிறைய ஆட்கள் இருந்தார்கள். இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று புரியவில்லை.
அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார்.
என்னை பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன். அரசியல் என்பது என்ன? அதன் ஆழம் என்ன? என்பது எனக்கு தெரியும்.
யார் தோளில் ஏறி போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும். அப்படி போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் ஏற்பட வேண்டும்.
அரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். இங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னை பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன். -http://123tamilcinema.com
இவ்வாறு ரஜினி பேசினார்.
ரஜினி: ‘ஆழம் தெரியாமல் காலை விட்டு அவதிப்பட மாட்டேன் மூளை கெட்டு’ அரசியல் என்ன சினிமாவா? ஒரு தடவை சட்ட சபைக் கூட்டினால் 100 தடவை கூட்டின மாதிரி என்று வசனம் பேச? ரஜினி ஒரு பணம் பண்ணும் இயந்திரம். அரசியல் தந்திரமும் (அரசியல்) ஞானமும் அவருக்குக் குறைவு. எனவே அரசியல் கடலில் அவர் குதிப்பது அவரது புகழை மங்கச் செய்யும்.
கேசவன் அவர்களே உண்மைதான் ,இருக்கிறன் அவரை தூண்டி விடுவதில் கெட்டிக்காரன் ,வேற யாரு நம்ம தமிழ் தமிழ் நாட்டு மக்கள் தான் ,மற்றபடி அவர் ஒரு நல்ல மனிதர் ,ஒரு தடவை 2002டில் நடந்த மெகா நைட்டில் என் நண்பர் ( எர்த்பாட்டாளர் )மூலமாக அவரை பார்க்க சென்றேன் ,அப்பொழுது என் நண்பர் எங்கள் குடும்பத்தை சீசன் ஓட்டல் பாதி தூரம் வரை தான் அழைத்து சென்றார்கள் ,அதுக்கு பிறகு ரெலா உறுப்பினர்கள் கிட்டே நிருங்க விட வில்லை ,நான் என் பெயரையும் சொல்லி பார்த்தேன் அப்பேயும் நெருங்க விட வில்லை ,அந்த வழியி கமலா ஹசன் அறையில் இருந்தார் நம் முக்கிய புள்ளியும் அவருடன் இருந்தனர் ,என் மகளுக்கு 2 வயது ,என் மனைவி அவரை சுமந்துகொண்டு என்னுடன் வந்தார்கள் ,ரஜினி சாரை பார்க்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன் ,அந்த இடத்தில கொஞ்சம் சலசலப்பு ஏற்ப்பட்டது ,இறைவன் அருளால் திடிரென அன்பின் உருவம் ரஜினி வெளிவந்து விடுங்க விடுங்க வர சொல்லுங்க என்று சொன்னார்கள் ,என் மகளின் கன்னத்தை கில்லி கொஞ்சிவிட்டு எங்களுடன் ஒரு கேள்வி கேட்டார்கள் ,இவ்வளவு காசு கொடுத்து எங்களை சிரமத்துடன் பார்க்க வருகிற நீங்கள் எதுக்கு ஓட்டல் வரைக்கும் வரவேண்டும் ,நானும் உங்களை போன்றவந்தானே என்று சொன்னார்கள் ,கை குழந்தையை தூக்கிகிட்டு என்னை பாக்க வேண்டிய அவசியம் இல்லையே .அதற்க்கு பிறகு நான் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன் ,அவர் ஏற்றுக்கொள்ளவில்லை ,அவர் சொன்ன கடைசி வார்த்தை ,உங்க அப்பா அம்மா காலில் விழுங்கள் உங்களுக்கு புண்ணியம் ,நான் ஒரு நடிகன் என்று உரைக்க சொல்லி அனுப்பிவிட்டார் .அப்படி பட்ட நல்ல மனிதரை ,புகழ் உச்சியில் இருக்கும் நல்ல மனிதரை நான் பார்த்ததே இல்லை .அதே போல தான் டதோ சாமில்வேளுவையும் போயி பார்த்தேன் ,ஒரு விசியமாக ,சாமிவேளுக்காக கால் கடுக்க நின்றேன் ,சாமிவேலு ஒரு தமிழன் ,நல்ல விசியதிர்க்கு அவரை பார்க்க சென்ற பொது ,அந்த உதாம சாமிவேலு என்னை பார்த்து கேட்டார் ,எங்கடா கால காத்தாலே எனக்கு இம்சை கொடுக்குறேங்க ,என்று ,சாமிவேலு ஒரு தமிழன் .மேலும் தொடரும் ,எப்ப எப்படி என்று தெரியாது ,தொடர வேண்டிய நேரத்தில் தொடரும்
மோகன் வைத்தியரிடம் சென்று செக் பண்ணவும்.
ஆழம் தெரிந்தால் மட்டும் என்னத்தை கிழிக்க முடியும்.சிரிப்பாய் சிரித்து சிரழிந்து போவாய்.
மோகன் அவர்களே… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..! திரைப்பட நடிகனை திரைப்படத்தில் பார்த்து ரசித்து தமிழ் ரசிகனின் ‘தேசிய கீதமான’ விசிலடிப்பதோடு நின்றுவிடுவது தானே? ஏன்? எதற்கு? அவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு மனைவி மகளுடன்? அதுவும் அங்கே சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற வேண்டிய அவசியம் என்ன? ஒரு நடிகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதா? இப்படியெல்லாம் நான் கேட்டால் மற்றவர்களைப் போலவே உங்களுக்கும் நிச்சயம் கோபம் வரும் அதனால் தான் ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..என்று மேலே சொன்னேன்.
அடுத்து டத்தோ ஸ்ரீ சாமிவேலு. இவரை 3 முறை நேரில் சந்திக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் (மகா கோபக்காரர் என்று செவி வழி கேட்டதுண்டு). முதல் சந்தர்ப்பம் ஒரு அவரது பொதுப்பணி அலுவலகம் சென்று ஒரு கோயில் கட்டுவதற்கான நில வரை படத்தை காட்டி திருத்தங்கள் பெற. அப்போது என்னிடம் பென்சில், அடிகோல் கேட்டார். நான் கொண்டு வரவில்லை பேனா மட்டுமே இருக்கிறது என்றேன். உடனே அவர் அவரது மேசை மேல் இருந்த இரண்டையும் எடுத்து வந்து திருத்தங்களை வரைந்த பின்னர், அந்த பென்சிலையும் அந்த ஆறு அங்குல அடிகோலையும் என் சட்டைப்பையிலேயே வைத்து இது போன்ற வேலைக்கு செல்லும்போது இந்த இரண்டும் உங்களுடனேயே இருக்க வேண்டும் என்றார் – அன்பாகவே..!. அடுத்து என் மகன் MRSM. படிக்க உத்தரவு கடிதம் பெற அதே பொதுப்பணி அமைச்சு அலுவலகத்தில்..! மூன்றாவதாக, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளி சமயத்தில் மின்னல் எப்.எம் வானொலியின் ‘சின்ன சின்ன ஆசைகள்’ நிகழ்ச்சி வழி அவரை பேட்டி காண அவரது இல்லத்துக்கு நான் என் மனைவி மற்றும் 3 மின்னல் எப்.எம். பணியாளர்களுடன் சென்றோம். என்னுடைய சுற்று வரும் முன், அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நின்றபடி பேட்டிக் கொடுத்தார். அந்த நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அனல் பறக்க பதில்களைச் சொன்னார். அதன் பின்னர் என்னுடைய முறை. என்னுள் சிறு அச்சம் – என் மேலும் கோபப்படுவாரோ என்று.. அவர் வீட்டு வரவேற்பறையில் உள்ள மேசையில் நாற்காலியில் அமர்ந்து என்னுடைய கேள்விகளுக்கு தயாரானோம். அரசியல் கேள்விகள் தவிர்த்து விட வேண்டும் என்றும் 5 கேள்விகள் மட்டும் கேட்க வேண்டும் என்றும் மின்னல் எனக்கு முன்கூட்டியே உத்தரவு தந்திருந்தது. ஆனால் அவரோ பொது மக்களில் ஒருவராக வந்திருக்கீங்க எந்த கேள்வியும் கேட்கலாம். எத்தனைக் கேள்வியும் கேட்கலாம் என்று எனக்கு அனுமதி தந்தார். அன்பாகவும் பேசினார். என்னைப் பொறுத்தவரை 3 முறையும் அவர் ஒரு சாதாரண மனிதனாகவே எனக்குத் தெரிந்தார். இது என்னுடைய அனுபவம். அதனால் தான் நான் மேலே சொன்னேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் என்று. எனவே நாம் பெற்ற அனுபவத்தை வைத்து ஒருவரை எடை போடுவதும், அந்த அனுபவத்தை இன்னொருவர் மீது திணிப்பதும் தீது. நானும் மேலே உள்ள என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேனே தவிர உங்களிடம் ‘திணிக்கவில்லை’ அதுபோல, நீங்கள் மேலே சொன்னதையும் நான் உங்களின் ‘திணிப்பாக’ எண்ணாமல், உங்கள் கருத்தாகவே ஏற்றுக் கொள்கிறேன்.
ஏதோ தொடர வேண்டிய நேரத்தில் தொடரும் என்று மேலே சொன்னீர்களே..இதை அதற்கு ஏற்ற தளமாக – களமாக எண்ணி தொடருங்களேன்..உங்கள் அனுபவங்களும் கருத்துக்களும்ம் மற்றவர்களுக்கும் தேவைப்படுவதாக இருக்கலாம் அல்லவா? அவர்களும் பலன் பெறட்டுமே…!
ரஜினிக்கு அரசியல் வருவதக்கு ஆசை இருக்கிறது, அதை வெளிய தெரிய கூடாதம், பணத்தை வீண் செய்யாமல் பொழைக்கிற வழிய பாக்க சொல்லுங்க.
KUMKI வர்களே ,குழந்தைகள் காணாமல் போவது இந்த மாதிரியான வைதியர்கலால்தான் ,கண் ,மற்றும் உடல் உறுப்புகள் தேவை படும்போது குறிப்பிட வயதுக்கு தகந்தால் போல் பிள்ளைகளை கடத்த சொல்கிறார்கள் இதுக்கு பின்னால் பெரிய பெரிய பணக்கார கூட்டமே இருக்கு .என்னை வைத்தியரிடம் போயி பார்க்க சொல்லுவது தப்பு ,என் உடலை பாதுக்காக்க எனக்கு தெரியும் .நீங்கள் வேண்டுமானால் போயி பாருங்க ,