பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று நடிகர் நடிகைகள் தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நடிகர் கமலஹாசன் சமீபத்தில் சென்னை அருகே உள்ள மாடம் பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தினார். ஏரிகரையோரம் கிடந்த குப்பைகளை அள்ளினார். கமல் ரசிகர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.
நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளிக் கூடத்துக்கு சென்று அங்கு கிடந்த குப்பைகளை அள்ளினார்.
தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன் பாபு உள்ளிட்டோரும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து தெருக்களில் கிடந்த குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்கள்.
இது போல் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், நடிகை பிரியங்கா சோப்ரா போன்றோரும் மும்பையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மூவரும் துடைப்பத்துடன் தெருத்தெருவாக சென்று குப்பைகளை கூட்டினார்கள். பிறகு அவற்றை கூடையில் அள்ளி குப்பைத் தொட்டியில் கொண்டு போய் கொட்டினார்கள்.
இவர்களுடன் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் குப்பை அள்ளினார்கள்.
ஆக மொத்தத்திலே இந்திய ஒரு அழுக்கு நாடு என்பதை உலகுக்கு தெரிய படுத்திவிட்டார் இந்திய பிரதமர் . குப்பைக்கள் குப்பை கூட்டுவது ஒன்றும் அதிசயம் அல்ல . இன்னும் ஒரு மாதத்தில் பழைய நிலைக்கே வந்துவிடும் குப்பைகள் . அப்போதும் துடைபத்தை பிடிப்பார்களா ? சொந்த வீட்டையே சுத்தமாக வைத்து கொள்ள தெரியாத வர்கள் நாட்டை எப்படி சுத்தமாக வைத்துகொள்வார்கள் .