பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் விளம்பர தூதுவர்களாக சில சினிமா நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். அவர் தனது பிறந்தநாளன்று தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து, தனது ரசிகர்களுடன் தூய்மை படுத்தும் பணியில் களமிறங்கினார். அவரைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் தூய்மை இந்தியா திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது கவிஞர் வைரமுத்துவும் தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் சமீபத்தில் வைரமுத்துவை அவரது இல்லத்தில் சந்தித்து தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஒரு பாடல் எழுதித் தரும்படி கேட்டுள்ளார். அந்த அழைப்பை ஏற்று வைரமுத்துவும் பாடல் எழுதித்தர ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, அரசியல் கலப்பு இல்லாமல் ஒரு தேசிய சேவையாக, ஜாதி, மதம் கடந்த ஒரு உயர்ந்த திட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த ஊதியமும் இல்லாமல் இந்த பாடலை எழுதவிருக்கிறேன்.
தூய்மை இந்தியா என்ற உயரிய திட்டம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ இந்த பாடல் சிறு கருவியாக பயன்பட்டால் பெரும் மகிழ்ச்சி அடைவேன். இந்த பாடலுக்கு தூய்மை கீதம் என பெயரிடப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார். -http://cinema.maalaimalar.com
தூய்மை இந்தியாவா? என்னடா காதுல ரோஜாவுக்கு பதிலா வலைப்பூவ வைக்க பார்கிரே? முதலில் கூவம் ஆற்றை சுத்தம் பண்ணுங்கடா.