போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், ‘787 ட்ரீம் லைனர்’ நேற்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது.
உலகின் முதல் ‘பிளாஸ்டிக் ஜெட்’ என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி, கார்பன் இழைகள் மற்றும் நெகிழியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நெகிழியால் செய்யப்பட்டுள்ள இந்த விமானம் எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்று கூறப்படுகிறது.
264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானம், ஜப்பான் விமான நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்லைன்சினால், (ஏ.என்.ஏ) டோக்யோவிலிருந்து ஹாங்காங்குக்கு நேற்று இயக்கப்பட்டது.