திரையுலக நட்சத்திரங்களுக்கு மக்களும், மீடியாவும் அளவுக்கதிகமான முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். அதன் காரணமாகவே நடிகைகள் தும்மினாலும் அது செய்தியாகிறது. அவர்களின் இரண்டு ரூபாய் உழைப்புக்கு இருபது லட்சங்கள் தரப்படுகிறது.
இந்த முக்கியத்துவத்தை, அதிகபடியான சம்பளத்தை கேள்வி கேட்காமல் அனுபவிப்பவர்கள், அதன் இன்னொரு விளைவான நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாராவது பேசினால், நாங்களும் உங்களை மாதிரிதான் என்ற டயலாக்கை தூக்கிப் போடுவார்கள்.
த்ரிஷாவும் போட்டிருக்கிறார்.
த்ரிஷா, வருண் மணியன் நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற சமீபத்திய வதந்தியை த்ரிஷா மறுத்திருந்தார். ஆனால், அதன் வீச்சு இன்னும் அடங்கவில்லை. அதுகுறித்து பேசியிருக்கும் அவர், ஹீரோயின்களை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்களைப் போலதான். விருப்பு வெறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தயவுசெய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷாவோ மற்ற நடிகைகளோ ஸ்பெஷல் கிடையாது. அதனால் சாதாரண நாயகிகள் வாங்கும் சம்பளத்தை ஒன்றோ, இரண்டோ லட்சங்களை மட்டும் – இனி தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு தந்தால் போதும். -http://tamil.webdunia.com


























கவலை வீடு உனக்கு நான் வாய்ப்பு வாங்கி தாரேன்…………………….அடுத்து கமல் படத்தில் உனக்கு வாய்ப்பு ,ஓகே வா…………………..
நடிகர்களை திரையில் பார்த்து ரசிப்பதோடு நிறுதிகொள்ளவேண்டும்..அவர்களின் தனிப்பட்ட விஷியங்களில் நுழைவது நல்லது இல்லை .தவறு செய்யாத மனிதர்களில்லையே …
சொன்னாலும் சொன்னிர்கள் சரியான வார்த்தை, குத்தாடிக்கு வக்காலத்து வாங்கும் மரமண்டைக்கு புரிந்தால் சரி.
கும்கி datin இந்த்ரா ஒரு முறை சிங்கப்பூரில் நடந்த ஒரு மேடை நிகச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து சிவாஜி, சௌகர் ஜானகி, சரோ காலில் விழுந்து ஆசி பெற்றார்
சங்கரா, இந்திரா மட்டுமில்ல முக்கால்வாசி பெண்கள் மாமியார் காலை வாரிவிட்டு அடுத்தவர் காலில் விழும் குடும்ப குத்துவிளக்குதான்.