நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லிங்கா படத்தின் தெலுங்கு பதிப்பின் அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே. விஸ்வநாத், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் நான்கு வருடங்களுக்கு மேல் படங்களில் நடிக்கவில்லை. இடையில் கோச்சடையான் வெளியானது. ஆனால் அது அனிமேஷன் படம். அதனால் நேரடி படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் தான் லிங்கா படத்தின் கதை பற்றி சொன்னார் கே.எஸ். ரவிக்குமார். 6 மாதத்தில் முடிப்பதாக இருந்தால் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன். கே.எஸ். ரவிக்குமார் அந்த சவாலை ஏற்று படத்தை ஆறு மாதத்திலேயே முடித்து விட்டார்.
அதுவும் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இருந்தும் படத்தை திட்டமிட்டபடி முடித்தது பெரிய சாதனை. எனக்கும் இது சவாலான படம். திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன்.
எனக்கு லிங்கா படம் சவாலாக இருந்தது .சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சோனாக்ஷி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன் வளர்ந்தவர். அவரோடு காதல் டூயட் பாட வேண்டும் என்றதும் வெட வெடத்து போனேன்.
நான் அறிமுகமான முதல் படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கூட இப்படி ஆனது இல்லை. அவரோடு சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற மேக்கப் மேன் காஸ்ட்யூம் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.
60வயதை கடந்த என்னை இப்படி டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை. ஓடும் ரெயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை யெல்லாம் விட சோனாக் சியுடன் டூயட் பாடுவது சிரமமாக இருந்தது.
இவ்வளவுக்கும் நடுவில் திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன். ஹாலி வுட்டிலும் இது போன்ற பிரமாண்ட படங்கள் நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க நிறைய காலம் எடுக்கிறார்கள்
பாகுபலி படம் மூலம் ராஜமௌலி இந்தியாவிலேயே நம்பர் ஒன் இயக்குனராக வலம் வருவார். ஏனெனில் அவருடைய படத்தைப் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டதினால் சொல்கிறேன். எனக்கும் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். -http://www.dinamani.com
தண்டனை அல்ல ரஜினி அவர்களே, நீங்கள் கடவுள் மேல் வைத்த பக்திக்கு சோதனை. பெண் மாயை உங்களை கீழே இழுக்கும், அதை மீறி சென்றால் சாதனை. இது எல்லா சாமியாருக்கும் உள்ளதுதான்.
ரஜினி அங்கிள் ரஜினி அங்கிள் எனக்கு கொஞ்சம் டவுட்டு கேக்கலாமா? ஓவ்வொரு படம் முடிஞ்சதும் இமயமலைக்கு போறீங்க, நல்ல ஆன்மீக வாதிதான்..பாராட்டுக்கள். ஆனா போய்ட்டு வந்ததும் அடுத்தப் படத்திலே 15 வயசு 17 வயசு இளம் சிட்டுகளாப் பார்த்து ஜோடி சேர்ந்து காதல் கட்டிப்புடி என்று முகம் சுளிக்க வைத்தீர்கள். ஈதோ பணம் சம்பாதிக்கத்தான் இப்படின்னு அதைக் கூட சகிச்சிக்கிட்டோம். ஆனால் அதுக்கெல்லாம் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ’60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை’ அப்படின்னு சொல்லிட்டீங்க. இது உண்மையிலேயே நீங்க சொன்னது தானா? அப்படி நீங்க சொல்லியிருந்தா உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்க நெனச்சிருந்தா குட்டிகள் கூட காதல் பாட்டுப்பாடி கும்மாளம் போடாம வயசுக்கும் தகுதிக்கும் ஏற்ற மாதிரியான கதாபாத்திரத்திலே நடிக்கலாமே? முடியாதா? இமயமலைக்கும் போறீங்க போய்ட்டு வந்து இளசுகளோட கும்மாளம், அதுல வேற இப்ப இது ஒரு தண்டனை’ன்னு சொல்றீங்க. உண்மையிலேயே எங்களுக்குத்தான் தண்டனை, காரணம் இப்படிப்பேசி இப்படி நடந்துக்கற உங்களுக்கும் நித்தியானந்தாவுக்கும் என்ன வித்தியாசம்னு புரியலே. உங்களோட உலகமகா ரசிகர்கள் அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமா கேவலப்படுத்திட்டிங்களே ரஜினி அங்கிள்..! ஒரு சின்ன திருத்தமுங்க. நீங்க அறிமுகம் ஆனா முதல் படம் அபூர்வ சகோதரர்கள் அல்ல, அபூர்வ ராகங்கள்..! – ரஜினி ரசிகன்
அமரராகிவிட்ட நடிகர் வி.கே. ராமாசாமி தனது 21-வது வயதில் “நாம் இருவர்” படத்தில் கிழவனாக நடித்தார். அதன் பிறகு அவர் சாகும்வரை கிழவனாகவே நடித்தார். இளைஞனாக எப்படி இருந்திருப்பார் என்று கூட தெரியவில்லை! அப்படி ஒரு தண்டனை!
அறிச்டோடேல் வயதானபின் அவரை ஓர் இளம் பெண் காதலித்தால். அந்த பெண் சொன்னால் உங்கள் திறமை, அனுபவமும் என் அழகும் சேர்ந்தால் சிறந்த குழந்தை பிறக்கும் என்று. அது போல் ஆண்களின் திறமை, அனுபவம், முதிர்ச்சி, அறிவு பெண்களை இழுக்கும், பெண்களின் இளமை அழகு, வயதானபின் அன்பு ஆண்களை இழுக்கும். அப்படிதானே குரங்கிலிருந்து மனிதன் ஆனோம்.வயதாகின்றது என்று குஷ்பூ, ராதிகாவை உங்கள் ஹெரோஇன் ஆக்கி படத்தை கெடுத்து விடாதீர்கள். திறமை அழகு கூட்டணி டான் சூப்பர்.
ரஜினி ரசிகன் அவர்களே சிவாஜி இறுக்கமாக நடித்ததை பார்த்தீர்களா ,குடும்பத்தோடு பார்க்கும் பொது முகம் சுளிக்க வைக்கும் ,பொன்மகள் வந்தால் என்ற படலை பாருங்கள் ,mgr இதயகனியில் இதாலே இதாலே நீ வேண்டும் என்ற பாடலுக்கு கதாநாயகியின் பாடியை கலட்டி விடுவார் ,நாளை நமதே படத்திலும் அப்படிதான் ,கமலஹாசன் நடித்த சிவப்பு ரோஜாக்களை பாருங்கள் கன்றாவி ,அந்த சிகப்பு விளக்கில் நடக்கும்கூது ஆபாச படத்தில் உள்ள காட்சி போல் இருக்கும் ,இது நாள் வரையிலும் நானும் ரஜினி படைடஹியும் பார்த்து இருக்கேன் அப்படி ஒன்னும் கன்றாவியாக தெரியவில்லை ,அதான் புகழ் உச்சியில் இருக்கிறார் . (ரஜினியின் எதிரி )
MK. நீங்க உண்மையிலேயே மொக்கையா? மறுப்புக் கருத்து எழுத வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் கருத்தை முழுமையாகப் படிக்காமல் – அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கூட புரிந்து கொள்ளும் திறமை (அறிவு) இல்லாமல் இப்படியா மொக்கையாக எழுதுவாய்? சிவாஜி கன்னத்தோடு இதழ் (உதடு) பதிப்பார். MGR. நாளை நமதே படத்தில் லதாவின் MINI-Skirt. உள்ளே கை விடுவார். கமல் வரவேற்பறையில் Undewear. மாற்றுவார். நான் இதையெல்லாம் இல்லை என்று சொல்லவில்லையே. ஆனால் அவர்கள் யாரும் அப்படி நடித்துவிட்டு (ருசித்துவிட்டு) இவனைபோல ‘அதுவெல்லாம் கடவுள் கொடுத்த தண்டனை என்று சொன்னதில்லையே…மூன்று வேளையும் நல்லா வெளுத்துக் கட்டிவிட்டு பந்தியை விட்டு எழும்போது ‘இல்லை ஓட்டை’ என்று சொல்வதா? இதை சாப்பிட்டது என் தலையெழுத்து என்பதா? அது ஆண்டவன் எனக்குத் தந்த தண்டனை என்பதா? மேலும் அவர்களோடு ரஜினியை ஒப்பிட உ(மக்கு) என்ன வந்தது? ரஜினியை அல்லது அவர் செய்தது சரியென்று மட்டும் அல்லவா நீர் வாதிட வேண்டும்? வாதிட வக்கில்லாதவன் மாதிரி, மண்டயில் சரக்கு தீர்ந்து களிமண் நிறைத்தவன் மாதிரி எழுதலாமா? மற்றபடி நீர் ரஜினியை பூஜை அறையில் வைத்து வழிபடுவதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை – ரஜினி ரசிகன்
MK அறிவு …..சூன்யம்………………..
Rasigan அவர்களே சூபரா எழுதி இருக்கீறீர்கள் .
அப்படியே ரஜினிக்கு தண்டனை என்றால் ,அந்த கதா நாயகிகள் யாரு??
Hello DBKL? இங்கே – செம்பருத்தி வாசகர் கருத்துப் பகுதியில் மொக்கை என்ற பெயரில் சுயநினைவில்லாமல் ஒரு ஜந்து வருகிற போகிற எல்லோர் மீதும் விழுந்து பிறாண்டிக் கொண்டிருக்கிறது.உடனடியா வந்து அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால் தஞ்சோங் ரம்புத்தான் ____ மனையில் அட்மிட் பண்ணுங்கள். – ரஜினி ரசிகன்
இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள் .இதை எல்லாம் போடா மாட்டேங்க்களே ?