கருப்பு வெள்ளை காலத்து கிட்டப்பா, பாகவதர் படங்களில் வசனத்துக்கு பதில் பாடல்கள்தான் படம் முழுவதும் நிரம்பி இருக்கும். ‘பராசக்தி‘ அதிரடி வரவால் சினிமா பாணியே மாறியது. வசனத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சமீபகாலமாக திகில், திரில்லர், பிளாக் காமெடி என்ற பெயரில் பாடலே இல்லாமல் படத்தை முடிக்கிறார்கள்.
ஆனால் ‘வானவில் வாழ்க்கை‘ என்ற படம் 17 பாடல்களுடன் உருவாகி வருகிறது. இதுபற்றி பட இயக்குனரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது,‘நடிகர்களே சொந்த குரலில் பாடி நடிப்பதுதான் மியூசிக்கல் படம். இதற்காக புதுமுக நடிகர், நடிகைகளை தேடத் தொடங்கினேன்.
அவர்களை கண்டுபிடிப்பதற்கு 2 வருட அவகாசம் தேவைப்பட்டது. கல்லூரியில் படித்து வரும் ஜித்தின், ஜனனி, கசான்டிரா, கானா சிவா உள்ளிட்ட 11 புதுமுகங்கள் தேர்வாகினார். ஆர்.கே.பிரதாப் ஒளிப்பதிவு. செய்திருக்கிறார். ஜோசப் தயாரித்திருக்கிறார்’ என்றார். -http://cinema.dinakaran.com