கோச்சடையான் படத்தின் சறுக்கலுக்கு பின்பு சூப்பர்ஸ்டார் மீண்டும் எழுந்திருக்கும் படம் லிங்கா.
முதல் காட்சியே கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் அட்டகாசமாக தோன்றியிருக்கிறார்.
கதை என்ன?
திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் லிங்கேஷ்வரன் என்ற ரஜினி. இவரின் நண்பராக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி. இதை வைத்து ரஜினியை மிரட்டி தன் ஊருக்கு வரவைக்கிறார் அனுஷ்கா
இடைவேளையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதில் ரஜினி தான் யாரென்று தெரிந்து கொள்கிறார். பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் தாத்தா ரஜினி, சோனாக்ஷி சின்ஹா வின் கதைக்களம் விரிகிறது.
முதல் பாதி அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் என்று ரஜினியுடன் பின்னி எடுக்க நல்ல வேகத்தில் படம் செல்கிறது. கொஞ்சம் கதையுடன் முதல் பாதி நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது.
சூப்பர்ஸ்டார் வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்துகொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். ரயில் சண்டைக்காட்சியில் பின்னி எடுத்துள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா கொஞ்சம் பளிச்சிடுகிறார். பாலிவுட் இறக்குமதியான சோனாக்ஷிக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லையென்றாலும் பாடல்களில் மனதில் பதிகிறார். காமெடிக்கு சந்தானத்துடன் கருணாவும் இணைந்துள்ளார்.
பாடலில் சொதப்பினாலும் பின்னணி இசையில் ரகுமான் மிரட்டியுள்ளார்.
திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமாரின் அனுபவமும் நேர்த்தியும் அருமை. எப்போதும் போல இந்த படத்திலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியுள்ளார். ஒளிப்பதிவில் ரத்னவேலு அந்தகாலம், இந்தகாலம் என்று மெனக்கெட்டு நம்மை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்.
மொத்தத்தில் “லிங்கா” மூலம் மீண்டும் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார் “கிங்கா”.
-http://www.cineulagam.com
இந்தப் படத்தில் நடித்ததற்குத்தான் ’60-க்கும் பிறகும் இளம் பெண்களுடன் டூயட் பாடவேண்டும் என்பது ஆண்டவன் எனக்குத் தந்த தண்டனை’ உண்மைதான். ஆனால் அந்த தண்டனை அவர்க்கல்ல. இந்தப் படத்தைப்பார்த்த ரசிகர்களுக்குத்தான். படம் பற்றி ஒரே வார்த்தை: – ‘புஸ்வானம்’
இந்த தாத்தாவோட அக்கபோரு தாங்கல டா சாமி . 60 வயசுக்கு மேலே அச்சு . அபிதாப் பச்சன் குட இந்த அளவுக்கு அலயல. டைரெக்டர் என்ன சொன்னாலும் அப்படியே செய்யனும ? வயசு வித்யாசம் பார்க்கறது இலே . என்ன ஜொள்ளு .
அம்மா சாந்தி படத்திலும்.சீரீயலிலும் கதைக்கேற்ப்ப ஒரு நடிகையின் கழுத்தில் சாஸ்திர சம்ரயத்துடன் பல நடிகர்கள் தாலி கட்டுகிறார்களே அந்த பெண்ணுக்கு மனநிலை எப்படி இருக்கும்.தமிழ் கலாச்சாரம் ஏற்றுக்கொள்கிறதா?தொப்புளில் ஆம்லட் போடுவதும்,பம்பரம் விடுவதையும் பார்த்து பெண்கள் ரசிக்கிறார்களோ? தாலி காட்சியை தவிற்து விடலாமே.அறுபது வயதிலும் தாலி கட்டுவார்!
மனிதன் என்று ரஜினி பட தலைப்பு பேரில் வைத்து ,.. ரஜினியையே தாக்குகிறாய்..நீ அறிவு உள்ளவனா ?
இந்த வயதில் நீ எப்படி இருப்பாய்… …
ராமபரத். உங்களுக்கு என் கருத்தில் உடன்பாடில்லை என்றால் அந்தக் கருத்தை மட்டும் வெட்டி எழுதுங்கள், வரவேற்கிறேன். அதை விடுத்து ‘நீ அறிவு உள்ளவனா ?’ என்று என்னை விளித்து நீங்கள் கேட்கும்போது மற்ற விரல்கள் உங்களையே சுட்டுவதைக் கவனிக்கவும். என்ன நான் சொல்வது புரியவில்லையா? நானும் உன்னுடைய பாணியிலேயே எழுதட்டுமா? இதை படி:- என் கருத்தைப் படித்து விட்டு குறைப்பிரசவத்தில் பிறந்தவன் மாதிரி வாந்தி ஏனோ எடுக்கறே..? இப்ப புரியுதா? ரஜினி ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல..
அறுபதுக்குப் பின்னரும் அவர் ஓர் இளைஞராக நடிக்கும் அந்தத் திறமையைப் பாராட்டுங்கள். பாராட்டுவதற்குக் கூட ரொம்பவும் கஷ்டப்படுகிறோம். இங்குள்ள 20 வயதுள்ள இளைஞன் சம்சுவைகுடித்துக் குடித்து 60 வயது காரன் மாதிரி இருக்கிறானே அதனைப் பார்த்து பார்த்து நமது மனமும் கிழடு ஆகிவிட்டதோ!
ரஜினி பேசும் வார்தைகள் எல்லாம் விமர்சனம் செய்கிறதே உம்மை போன்றவர்களுக்கு என்ன சந்தோசமோ தெரியல? அவர் நடிக்காமல் வீட்டிலே இருந்தால் கூட நீர் சும்மா இருப்பீரோ? கூலியாக பஸ் கண்டக்டர் பிறகு நடிகராக …உழைப்பை பாரும்..சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம்..அதில் 60 வயது கிழவன் 20 வயது பெண்ணோடு ஜோடி சேர்ந்தால் , அது அந்த 20 வயது பெண்ணோட குடும்பம் யோசிக்க வேண்டியது …அது பற்றி ரஜினி தன் கருத்தை சொன்னால் அவரை விமர்சனம் செய்வது …அறிவுள்ள செயலாக படவில்லை…
ரஜினியை வைத்து கே.எஸ். ரவிகுமார் தமாஷ் பண்ணியிருக்காருங்கோ. என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது. ரவிக்குமாருக்கு இது தேவையாக இருக்கலாம். ஆனால் எவ்வளவோ கடந்து விட்ட ரஜினிக்கு இது தேவையா? அண்ணாமலை, முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி நாலு படத்தையும் ROJAK. செய்து மூன்றயும் link. செய்து Linka. (லிங்கா) கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சத்துக்கு கதையும் இருக்கு.. ரஜினி நினைத்தால் இன்னும் நல்லதாக – மக்களுக்கு என்று இல்லாவிட்டாலும் அவரின் ரசிகர்களுக்காக – என்றென்றும் மனதில் நிலைத்திருக்கும் வண்ணம் சிறப்பானதை தரமுடியும். இதைப் படித்துவிட்டு யாரும் என்மேல் எகிறிப்பாய நினைத்தால் படத்தை இன்னொரு ‘வாட்டி’ பார்த்து விட்டு அப்புறம் என்னுடைய இந்தக் கருத்தை மீண்டும் ஒருமுறைப் படித்து விட்டு பாயலாம்..
ஆபிரகாம் நானும் ஒரு காலத்திலே உங்க ரஜினி படம் பார்தவ தான் . இன்று என்னை போல ஒரு சிலருக்கு அவரின் அக்கபோரு பிடிக்கவில்லை . கன்னட கதாநாயகி ஒருவரையும் இவர் விட்டு வைக்க வில்லை ( soundarya aiwariya ,anuska ) , .அவர்களோடு நடிக்காமல் இருந்தது இல்லை . வருட கணக்கனாலும் விடமாட்டார்
அதை எந்திரன் பார்த்த பொது தெரிந்து கொண்டேன்.
.அந்த படத்தில் வந்த உலக அழகிக்கு மலையாள நடிகர்கள் என்றால் ஒரு புலரிப்பு சிரிப்பு நடிகர் என்றாலும் ஒரு டூயட் பாட ஆசை . . ரஜினி கே வயது 60 மேல் இருக்கும் . லிங்கா வில் இவர் பேரனாம் இவருக்கு ஒரு தாத்தா வாம் அதுவும் இவரே வாம் . அப்பா எங்கே போனாரோ ? நல்ல தலைவன் நல்ல பைத்தியகார விசிறிகள் . கமல் என்னடா என்றால் தமிழர் என்று சொல்லிகொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை . ஒன்னுக்கு மூணு பொண்டாட்டி அதிலே ஒரு குட தமிழச்சி இல்லை . இது தான் தமிழ் சினிமா காரங்க புத்தி .
படம் அருமை அருமை ,எப்படியோ இந்த படத்தில் நடப்பது போல் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்தால் போடும் ,,ரஜினியும் கன்னடத்து அரசாங்கத்திற்கு பயப்படாமல் தைரியமாக நடித்து இருக்கிறார் ,கன்னட காரர்கள் இவரை விரட்டி அடிக்காமல் இருந்தால் சரி .
https://www.youtube.com/watch?v=0j4qBbqE3gw – நடிகர் சத்யராஜ் ரஜினியை பாராட்டியுள்ளார் ,வாழ்த்துக்கள்
ஒரு நடிகருக்கு வயது .நிறம் .ஜாதி .மதம் என்று எதுவுமில்லை …அவர் நடிக்கிறார் ……இஷ்டம் இருந்தால் பார்ப்போம் .பிடிக்க வில்லை என்றால்……..அடுத்த தடவை பார்க்க வேண்டாம் ……..அது வெறும் சினிமா ………..நாம்தான் அதோடு கலந்துவிடுகிறோம் .
இன்றுதான் சன்வே போய் லிங்கா படம் பார்த்தேன். 16 வெள்ளி தெண்டம்,
படம் அவுட்.
மரத் தமிழர் மரியாதைக்கூரிய நடிகர் சத்யராஜ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை புகந்து தள்ளிட்டார் .நன்றி மறவா சத்யராஜ்.https://www.youtube.com/watch?v=Im7jacsKVR8
சினிமா மூன்று மணி நேர ஒரு பொழுது போக்கு.. நடிப்பில் நவரசம் தந்த சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பால் நமக்கு என்னென்ன நன்மைகள் , சொல்ல முடியுமா ? மக்கள் திலகம் ‘MGR நடிப்பில் மட்டும் என்னவாம்? தேவைபட்டால் தேவையானதை தேர்ந்தெடுத்து தேவைகளை தேற்றி கொள்வோம் …தேவையில்லாமல் அலடிக்கொள்ள தேவையில்லை .. ரசிகர்கள் செய்யும் செயலுக்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்..ரஜினி duet பாடும் கட்சிகளை பார்காதீர்கள் . அப்புறம் பார்த்துவிட்டு வயிறு எரிச்சலாகி , நண்பர் “mannan சொல்லவது போல் வாந்தி எடுக்காதீர் .
துதி பாடுதல் தமிழர்களின் இரத்தத்தில் ஓடுகிறது. அது நம்முடைய சாபக்கேடு. எந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்தாலும் துதி பாடி ஜால்ரா போடுவது தமிழர்களின் தலையாய பனி– அதுதான் அனுசரித்து போவது –