முதல் நாளில் ரூ.15 கோடி: லிங்காவின் சாதனை

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே  வெளியான ரஜினி நடித்த லிங்கா முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம்.  நேற்றைய தினம் மட்டும் ரூ.15 கோடி வசூலானதாம். இதற்கு முன் எந்திரன் முதல் நாளில் ரூ.11 கோடி வசூல் செய்தது சாதனையாக இருந்தது. இப்போது லிங்கா அந்த சாதனையை முறியடித்துள்ளது. ஆந்திராவிலும் லிங்காவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு முதல் நாளில் ரூ.8 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 4 ஆயிரம்  தியேட்டர்களில் லிங்கா படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-http://www.dinamani.com