இந்தியர்களின் சூப்பர் ஸ்டார் அப்துல்கலாம் : நடிகர் விவேக் பேச்சு

vivek_001திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் “நகர்புற வசதிகள் கிராமத்திற்கும் சென்றடைதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும், அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜூம் இணைந்து எழுதிய “எ மெனிபெஸ்டோ பார் சேஞ்ஜ்” என்ற புத்தக வெளியிட்டு விழாவும் நடைபெற்றது.

 

விழாவில் பசுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான விவேக் பேசுகையில், ’’அப்துல்கலாம் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியர்களின் சூப்பர் ஸ்டார்.  அவரால் ஈர்க்கப்பட்டு 2010 முதல் 2014 வரை திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மரம் நடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை 24.5 லட்சம் மரங்களை நட்டுள்ளேன். சாதாரண நடிகனான எனக்கு இன்று ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது என்றால் மரம் நட்டதுதான் எனது சாதனை.

 

மாணவர்கள் இன்றைக்கு அரசியலுக்கு வர தயங்குகிறார்கள். லஞ்சமும், ஊழலும் இந்தியாவை அழுத்திக் கொண்டிருக்கிறது. கருவறை முதல் கல்லறை வரை சில்லறைதான். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்’’ என்றார்.

-http://www.nakkheeran.in