வெள்ளக்காரத்துரை

வெள்ளக்காரத்துரை - Cineulagam

விக்ரம் பிரபு தான் இந்த வருடத்தின் ஸ்டார் ஹீரோ போல. சிகரம் தொடு, அரிமா நம்பி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து, ஹாட்ரிக் ஹிட்டிற்கு ரெடியாகிய படம் தான் வெள்ளக்காரத்துரை. அதே போல் மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா என வெற்றி படத்தை கொடுத்த எழில் விக்ரம் பிரபுவுடன் கை கோர்த்துள்ளார்.

எழில் தற்போதுள்ள ஆடியன்ஸ் பல்ஸை கையில் வைத்திருக்கிறார். அதனாலேயே சூரி, சிங்கம் புலி என நகைச்சுவை பட்டாளத்துடன் களம் இறங்கி ஒரு கமர்ஷியல் பேக்கேஜை தந்திருக்கிறார்.

கதை விவாதம்

தமிழ் சினிமாவில் வழக்கமான ஹீரோ போல் விக்ரம் பிரபு ஊர் சுற்றுகிறார். அதே போல் சூரி மாமனார் வீட்டில் வீட்டோடு மருமகனாக இருக்க, அவமானம் தாங்க முடியாமல் ஜான் விஜய்யிடம் பணத்தை வட்டிக்கு வாங்கி கொண்டு ஒரு இடத்தை வாங்குகிறார். ஆனால் அது சுடுகாடு என்று இறுதியாக தெரிய வர அதிர்ச்சியில் உறைகிறார்கள் விக்ரம் பிரபு, சூரி கோஷ்டி.

இதை தொடர்ந்து ஜான் விஜய்யிடம் அடிமையாக இருவரும் வேலை செய்ய, அங்கு ஸ்ரீ திவ்யாவை பார்க்க, காதல் தொற்றி கொள்கிறது. ஜாலியாக செல்லும் கதையில் டுவிஸ்டாக ஜான் விஜய்யின் திருமணப்பெண் தான் ஸ்ரீ திவ்யா என தெரியவர, அதை தொடர்ந்து ஸ்ரீ திவ்யாவை, விக்ரம் பிரபு கரம் பிடித்தாரா? என்பதை நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

நடிகர், நடிகைகள் பற்றிய அலசல்

விக்ரம் பிரபு முதன் முதலாக காமெடியில் கலக்கியிருக்கும் படம், மிகவும் கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார். ஸ்ரீ திவ்யாவும் அழகு தேவதையாக வந்து செல்கிறார். அதே போல் சூரியும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

சிங்கம் புலியின் வாய்ஸ் கேட்டாலே சிரிப்பு தொற்றி கொள்ள, வேறு ஏதும் அவர் பண்ண தேவையில்லை. ஜான் விஜய் சிரிக்கவும் வைத்து மிரட்டவும் செய்துள்ளார்.

டி.இமான் இசை மிக நன்றாக உள்ளது, விக்ரம் பிரபுவின் யதார்த்த நடிப்பு கம்ர்ஷியல் ஹீரோவிற்கான அத்தனை அம்சங்களும் வந்து விட்டது. வெல்கம் பாஸ். ஸ்ரீ திவ்யா ஸ்கிரீனில் வந்தாலே போதும் ரசிகர்களிடையே ஒரு வித சந்தோஷம் தான்.

சூரியின் கவுண்டர் வசனம், சிங்கம் புலி என பெரிய நகைச்சுவை பட்டாளமே படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளது.

காமெடியை பார்த்த நேரத்தில் கொஞ்சம் கதையிலும் குறிப்பாக திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் வெள்ளக்காரத்துரை சிரிப்பு காட்டும் துரையாகிவிட்டார்.

-http://www.cineulagam.com