ராஜபக்சேவுக்கு ஆதரவாக இலங்கையில் நடிகர் சல்மான்கான் பிரச்சாரம்

salmankhan rajapaksaஇலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இந்தியாவிலிருந்து சென்று பிரச்சாரம் செய்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது ராஜபக்சேவை ஆதரித்து பேசினார். அப்போது அவர், ராஜபக்சேவை ஒரு அற்புதமான மனிதர் என்று புகழ்ந்து பேசினார்.

 

சிறீசேனா தலைமையிலான எதிர்க்கட்சி பிரச்சாரத்திற்காக வடமேற்கு மாகாணத்தின் குருனிகலா நகரத்தில் உள்ளூர் கலைஞர்கள் கொண்ட குழு ஒன்றைப் பயன்படுத்தி வருகிறது. இதேபோல், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்தார்.

ஆனால், சல்மானின் வருகை உள்ளூர் கலைஞர்களுக்கு எதிரானது என்று மைத்ரிபாலா சிறீசேனா கருத்து தெரிவித்தார். மேலும் தனக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருவதைப் பார்த்து பயந்த ராஜபக்சே, பிரபலங்களின் ஆதரவு மூலம் அதை அதிகரிக்க நினைப்பதாகவும் சிறீசேனா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நடிகராக இருந்து அரசியலில் பிரவேசம் எடுத்த ரஞ்சன் ராமாநாயகே, சல்மான் கான் பிரச்சாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து யூ-டியூபில் வெளியான வீடியோ ஒன்றில் பேசிய ரஞ்சன் ராமநாயகே, “சல்மான், நீங்கள் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். நான் உங்கள் ரசிகன். தயவு செய்து ஊழல் அரசியல்வாதிகளிடம் உங்களை நீங்கள் விற்க வேண்டாம். தயவு செய்து இந்தியாவிற்குத் திரும்பிப் போய்விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

-http://www.nakkheeran.in