ஜனவரி 15ம் தேதி டிவிடியில் ரிலீசாகும் சேரனின் புது படம்

Director seranபுது படங்களை தியேட்டரில் வெளியிடும் நாளிலேயே வீட்டுக்கு வீடு டிவிடியாக விற்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் கூறியது:திருட்டு வி.சி.டியை ஒழிக்க கேட்டு தோற்றதுதான் மிச்சம். கேட்க நாதியில்லாத நிலை ஆகிவிட்டது. அதன்விளைவுதான் பட ரிலீஸ் அன்றே வீட்டுக்கு வீடு ஒரிஜினல் டிவிடி விற்க முடிவு செய்தேன். நான் இயக்கியுள்ள ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை‘ வரும் ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் எனது முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு டிவிடி விலை ரூ.50. சி2எச் என்ற எனது அமைப்பு மூலம் தரமான புதுபடங்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இதுபோல் வழங்கப்படுகிறது. தியேட்டர்களிலும் இப்படம் ரிலீஸ் ஆகும். தமிழ்நாடு முழுவதும் 75 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும். ஒருவேளை இதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டேன். ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மும்பையில் படத்தின் டிவிடி ஆர்டர் கொடுத்து தயாரிக்கப்படுகிறது. அர்ஜுனன் காதலி, கோடிட்ட இடங்களை நிரப்புக, வாராயோ வெண்ணிலாவே, அப்பாவின் மீசை ஆகிய படங்கள் அடுத்தடுத்து இதுபோல் வெளியிடப்படும். இவ்வாறு சேரன் கூறினார்.

– cinema.dinakaran.com