ஆயிரம்தான் விமர்சனங்கள் இருக்கட்டுமே. விளம்பரத்துக்காக செய்கிறார் என்றும் சொல்லட்டுமே. இக்கட்டான நிலையில் இருப்பவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு விஜய் என்றுமே தயக்கம் காட்டியதில்லை.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சனா. வயது 25. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் வினோத நோய் அர்ச்சனாவையும் தாக்கியது. இந்தநோயின் பாதிப்புக்குள்ளானவர்களால் நடக்க, பேச இயலாது. மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு மருந்தோ தீர்வோ கிடையாது.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட அர்ச்சனாவை வீட்டில் வைத்து அவரது பெற்றேnர் கவனித்து வருகின்றனர்.
அர்ச்சனா விஜய்யின் தீவிர ரசிகை. அவரை சந்திக்க விரும்பியிருக்கிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற அர்ச்சனாவின் பெற்றேnர் முயற்சி எடுத்துள்ளனர்.
இந்த விவரங்கள் விஜய்க்கு தெரிய வந்ததும், அர்ச்சனாவின் பிறந்தநாளில் அவரது வீட்டிற்கு வந்து அவரை சந்தித்தார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் (பேச முடியாதே தவிர பேசுவதை அர்ச்சனாவால் கேட்க உணர முடியும்).
நடக்க முடியாத அவரை தூக்கி நாற்காலியில் அமர வைத்ததும் விஜய்தான். அர்ச்சனாவுக்கும் அவரது பெற்றேnருக்கும் ஆறுதல் கூறியவர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைகூறி அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
திரையில் லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்விப்பதைவிட நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறிய இந்த குடும்பத்தின் மகிழ்ச்சிதான் அவர்மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்துகிறது.
-http://123tamilcinema.com