முன்பெல்லாம் ஒரு படம் 100 நாட்கள் ஓடினால் தான் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். ஆனால், இன்று 3 நாட்கள் நன்றாக ஓடினாலே போது, போட்ட பணத்தை எடுத்து விடலாம். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியம். பர்ஸ்ட் டேவின் யார் பெஸ்ட் என்பதன் தொகுப்பு தான் இந்த பகுதி.
லிங்கா
எப்போதும் எதிலும் சூப்பர் ஸ்டார் தான் முதலிடம், அவர் சாதனையை முறியடிக்க மீண்டும் அவரே, ஒரு படம் நடித்தால் தான் முடியும் போல. அந்த வகையில் சமீபத்தில் வந்த லிங்கா படத்தின் முதல் நாள் வசூல் ரூ 37 கோடி.
கத்தி
சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கொள்ளையடிப்பவர் இளையதளபதி விஜய் தான் இவரது நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கத்தி முதல் நாள் மட்டும் ரூ 23.80 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
அஞ்சான்
இந்த வருடம் மாபெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த படம் அஞ்சான். அந்த எதிர்ப்பார்ப்பின் காரணமாகவே இப்படத்தின் வசூல் முதல் ரூ 15.1 கோடி வரை வந்தது. ஆனால், பிறகு ஏற்ப்பட்ட மோசமான விமர்சனங்களால் வசூல் குறைய ஆரம்பித்து விட்டது.
சிங்கம்-2
சூர்யா பல் கடிச்சுட்டு தம் கட்டி 10 நிமிஷம் பேசுறான்னு அது கண்டிப்பா ஹரி படமாக தான் இருக்கும். சிங்கம் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக வெளிவந்த சிங்கம்-2வின் முதன் நாள் வசூல் ரூ 13 கோடி. இப்படம் மலேசியாவின் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
எந்திரன்
ஷங்கரின் இயக்கத்தில் உலகத்தர விஷ்வல், அனிமேஷன் என சூப்பர் ஸ்டார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் எந்திரன் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 11.25 கோடி. தற்போது வரை இப்படத்தின் முழு வசூலை எந்த படமும் நெருங்க கூட முடியவில்லை.
ஆரம்பம்
தல என்றாலே கிங் ஆப் ஓப்பனிங் தான். அந்த வகையில் ஆரம்பம் திரைப்படம் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி. இப்படத்துடன் இன்னும் 2 பெரிய படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா
விஜய் கேரளா மார்க்கெட்டை குறிவைத்து எடுத்த படம் ஜில்லா. இப்படத்தில் மோகன் லால் நடித்தது பெரிதும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி என கூறப்படுகிறது.
வீரம்
ஜில்லாவிற்கு போட்டியாக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் வீரம். இப்படம் பி, சி செண்டர்களில் வசூலை வாரி குவித்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 9.3 கோடி
துப்பாக்கி
விஜய்யின் கேரியரிலேயே மிகவும் முக்கியமான படம் துப்பாக்கி. இப்படம் 180 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 9.25 கோடி.
கோச்சடையான்
ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்தனை எதிர்ப்பார்ப்பா? என்றால் அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் தான். அவரின் குரலுக்காகவே இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 9 கோடி. ஆனாலும் போக போக படத்தின் வசூல் டல் அடிக்க, படம் தோல்விப்படமானது.
-http://www.cineulagam.com
தமிழ் பட பைதியங்கள் இருக்கும் வரைக்கும் இவனுங்களுக்கு நல்ல அடிதான் .
வணக்கம் நண்பா தமிழ் மக்களை மட்டும் குறை சொல்கிரிரர்கள் ஆனால் ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் பில்லியன் டாலர் வசூல் செய்கிறது அப்படியென்றால் உலக மக்கள் யாவரும் பைத்தியம் தான்
ஹாலிவுட் படங்கள் /நடிகர்கள் கொண்டாடபடுவதில்லை. தமிழ் திரைப்படங்கள் நடிகர்கள் படங்களுக்கும் உருவ அட்டைகளுக்கும் பால் ஊற்றி அபிஷேகம் செய்ய படுவதில்லை. அத்துடன் முட்டாள்தன மான காட்சிகள் அவ்வளவாக இருப்பதில்லை. அவர்களின் அறிவியல் சார்ந்த படங்கள் அவ்வளவு தத் ரூப மாக எடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் படங்களில் ஒரே குத்தில் 30 அடி பறப்பதும் 20 ஆட்களை ஒருவன் அடித்து துவைப்பதுவும் அங்கு கிடையாது. இன்னும் எவ்வளவோ. எனினும் தெய்வமகன் போன்ற படங்கள் பார்க்ககூடியவை. பொழுது போக்குக்காக சில படங்களை பார்க்கலாம். அனாலும் எல்லா படங்களிலும் காதல் காதல் காதல் இந்த கத்தரிக்காயை பற்றிஎ எல்லா படங்களும்- சகிக்கமுடியவில்லை. தமிழ் நாட்டில் ஒரு பெண்ணை பார்க்க கூடாது போலும். கிண்டல் கேலிகளுக்கு குறைவே இல்லை. என்னே முட்டாள் தனம்?