லிங்கா விநியோகஸ்தரர்கள் நஷ்டஈடு கோரி ஜனவரி 10-ம்தேதி உண்ணாவிரதம்?

Lingaa-teaserரஜினி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘லிங்கா’. இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. மூன்று வாரங்களை கடந்தும் இன்னமும் படத்திற்கு கூட்டம் வந்து கொண்டேயிருக்கிறது.

படத்தின் ஒட்டு மொத்த வசூல் 200 கோடியை தாண்டிவிட்டது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் மற்றொரு பக்கம், ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தாங்கள் பெரிதும் நஷ்டப்பட்டுவிட்டதாக கூறி வருகிறார்கள். மேலும் வசூல் மந்தமாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடி வரைக்கும் வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரிலீஸ் ஆன 22 நாளில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற்றிருக்கிறார்களாம். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நஷ்டம் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் இதைக் கண்டித்தும், நஷ்டத்திற்கு பதில் கோரியும் ஜனவரி 10-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரத்ததில் நிச்சயம் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னரே, பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-http://123tamilcinema.com