ஷங்கர் மற்றும் விக்ரமின் கடினமாக 2 வருட தவத்திற்கு கிடைத்த பலன் தான் இந்த ஐ. தமிழ் சினிமாவில் பெருமை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் முதல் முயற்சியை ஷங்கர் தான் எந்திரன் படத்தில் செய்தார், இதையே ஐ படத்தில் ஒரு படி மேலேயே கொண்டு சென்றுள்ளார்.
கூன் விழுந்த விக்ரம் , எமி ஜாக்சனை கடத்துவதிலிருந்து தொடங்குகிறது படம். அவர் எப்படி இவ்வளவு வீகோரமாக ஆனார் என்பதையே கூறுகிறது மீதி படம்.
சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும் பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு லீ எனும் லிங்கேசன் விக்ரம், தன் ஆசைபடியே தடை பல கடந்து மிஸ்டர் மெட்ராஸ் ஆகிறார்.
கட்டுடலும், கம்பீரமுமாக திரியும் விக்ரமை ஒருநாள் அவரது நண்பர் சந்தானம், விக்ரமுக்கு பிடித்த மாடல் அழகி தியா எனும் நாயகி எமி ஜாக்சனின் பாதுகாப்பிற்காக விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்கு அழைத்து போக, அங்கு விக்ரமின் கைமாறு கருதாத அன்பை கவனத்தில் கொள்ளும் எமி, தன் சக மாடல் நடிகர் ஜானின் செக்ஸ் டார்ச்சர் பொறுக்க முடியாமல் ஜானுக்கு போட்டியாக விக்ரமை பெரிய மாடலாக்கி சீனாவிற்கு ஒரு பெரும் விளம்பர படத்திற்காக கூட்டி போகிறார்.
மிஸ்டர் இந்தியா ஆசையை துறந்து விக்ரமும் சீனா சென்று எமியுடன் இணைந்து நடிக்கிறார். அவரது கூச்சத்தை போக்க, எமியை இயக்குநர், விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடி என அட்வைஸ் சொல்கிறார். இதற்கு முதலில் மறுக்கும் எமி, விக்ரம் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மீண்டும் ஜானுடன் இணைந்து நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலை தவிர்க்க விரும்பி விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடிக்கிறார்.
இந்த விளம்பர படம் இயல்பாக வந்து அந்நிறுவன வியாபாரம் பெருக பெரிதும் உதவுகிறது. இதற்குள் விக்ரம் – எமிக்கிடையே மெய்யாலுமே காதலும் மலருகிறது. அதன்பின் ராசியான ஜோடியான விக்ரமும், எமியும் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்து மாடலிங் உலகை கலக்குகின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஜான்.
அவரை போலவே மேலும் பல பேர் விக்ரமால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை கொலை செய்ய முனைகிறார்கள். உலகுக்கு தெரியாமல் விக்ரமை ஒழித்துகட்ட போடும் திட்டம் தான் ஐ எனும் வைரஸ்! சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்படும் ஐ வைரஸ் விக்ரமின் உடம்பிற்குள் அவருக்கே தெரியாமல் ஊசி மூலம் ஏற்றப்பட, விளம்பரப் படவுலகில் முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் முடி இழந்து முகம் இழந்து, பல் இழந்து, சொல் இழந்து கூன் விழுந்து, கொடூரமாக மாறுகிறார்.
இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.
-http://www.cineulagam.com
படம் டம்மி பீஸ் ,படத்தை நெட் வழியாக பார்த்தேன் ,என்னய்யா இது பல்லு முளைத்த பயி டூயட் பாடுது ,எங்கையாவது LOGIC இருக்கா ?? இன்னும் எத்தனை காலம் தான் இப்படியே குத்து ஆட்டம் போட்டுகிட்டு இருப்பாங்களோ
மோகன் மோகன் சொல்வது உண்மை. அற்புதமான தொழில் நுட்பம். அழகான படபிடிப்பு. கதையில் பலமில்லை. அல்லது குழப்பியது சரியில்லை. எதிரிகளை கதாநாயகன் பழிவாங்கும் முறை ரசிக்கும்படி சீரியசாக இல்லை. சிவாஜியின் மூத்த மகன் பளிச்சிடுகிறார். வைரத்தை செம்பு மோதிரத்தில் பதித்ததைப்போல உள்ளது – பலமில்லாத கதைக்கு அட்டகாசமான தொழில்நுட்பம் தேவையற்றது. சண்டைக்காட்சிகள், சீன நாட்டு வெளிப்புறக்காட்சிகள் அட்டகாசமாக உள்ளன. சங்கரின் பிரமாண்ட செட்டிங் தேவையே இல்லாத படம். விஞ்ஞான தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக விக்ரமின் உடலின் மாற்றத்தை லூசி ஆங்கிலப்படத்தில் நிகழ்வதைப்போன்று பிரமாண்டமாக்க் காட்டாமல், தேவையில்லாமல் பாடல் செட்டிங்கிற்கு பிரமாண்டத்தை காட்டியிருக்கத்தேவையே இல்லை. சங்கரிடம் இந்தப் படத்தை எதிர்பார்க்கவில்லை. இயந்திரன், முதல்வன், இந்தியன் போன்ற அற்புதமான படங்களைத் தந்த சங்கரா இந்தப் படத்தைத் தந்தார் என்று எண்ணும்போது ஏமாற்றமாக இருக்கிறது. சந்தானத்தின் நகைச்சுவை நம்மை கொஞ்சம் தூங்கவிடாமல் தடுக்கிறது. கதாநாயகியின் அழகும் நடிப்பும் நன்று. சங்கரை மன்னிப்போம்!
கற்பனை தானே சார் சினிமா ?? ஆளுயர்ந்த கோபுரத்தின் மேலே நின்று “உலகம் அழகு கலைகளின் சுரங்கம் ..”என்று எம்ஜியார் பாட >..ஜப்பான் எக்ஸ்போ வில் பல்லாயிரம் பேர் நடுவே நிற்கும் கதாநாயகிக்கு மட்டும் விளங்குகிறது !!அதையெல்லாம் கைதட்டி பார்த்த நாம் ஒரு தமிழனின் பகீரத முயற்சியை பாராட்ட வேண்டாமா ??
ஷங்கர் மற்றும் விக்ரமின் கடினமாக 2 வருட தவத்திற்கு கிடைத்த பலன் தான் இந்த ஐ.// அது எல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது The Fly ஹாலிவுட் படத்தை பார்த்து தமிழ் படம் சாயம் பூசி இருக்கும் படம் ஐ .
inthuDharman அவர்களே MGR இந்த காலத்தில் உள்ள பிரமாண்டத்தை அந்த காலத்திலேயே பிரமாண்டத்தை தன் உலகம் சுற்றும் வாலிபன் மூலம் காட்டி விட்டார்கள் ,அப்படி என்றால் இன்று தமிழ் படத்தில் எப்படி பட்ட பிரமாண்டம் இருக்க வேண்டும் அதை வீட அதிகமாகத்தானே இருக்க வேண்டும் ,இந்த படம் கண் கட்டி வித்தை காமிப்பது போலதானே இருக்கிறது ,இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் ,தொழில் நுட்பமும் விஞானமும் இன்று இப்படிதான் வளர்ந்து இருக்கிறது என்று விளம்பரம் போல் காமிக்கிறார்கள் .விஞானம் வளர்ந்து இருப்பது யாருக்குதான் தெரியாது .