விக்ரம் நடித்த ‘ஐ’ படம் இன்று ரிலீஸ் ஆனது. பாகிஸ்தானிலும் திரையிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் 4 விதமான தோற்றங்களில் வித்தியாசமான உருவத்துடன் நடித்துள்ளார். இதற்காக அவர் தனது உடல் எடையை கூட்டி குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடி எமிஜாக்சன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் உருவானது.
கடன் பாக்கி பிரச்சினையால் படத்தை 30–ந்தேதி வரை வெளியிட கோர்ட்டு தடைவிதித்து இருந்தது. இதனால் இந்தப் படம் பொங்கலுக்கு வெளிவருமா? என்ற நிலை இருந்தது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ‘ஐ’ படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்பெறப்பட்டது.
திட்டமிட்டபடி இன்று இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் 2,500 தியேட்டர்களில் ‘ஐ’ படம் வெளியானது. தமிழ்நாட்டில் 400 தியேட்டரில் திரையிடப்பட்டது. முதல் முறையாக பாகிஸ்தானிலும் ஐ படம் திரையிடப்பட்டு உள்ளது. லாகூரில் இந்தியில் திரையிடப்பட்டுள்ளது.
கடந்த 2012–ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இந்திய திரையுலகில் படப்பிடிப்பிற்காக மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்ட திரைப்படம் இதுதான்.
இந்திய சினிமாவில் தயாரான மிகப்பெரிய பட்ஜெட் படமும் இதுதான். அத்தனை சாதனைகளையும் முறியடித்து ரூ.1000 கோடி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக படதயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-http://cinema.maalaimalar.com
ம்ம் 100 கோடி வசூல் ,அதனையும் தமிழன் பணம் ,பணத்தை ஏழை எளியர்களுக்கு கொடுத்து உதவினால் சமுதாயம் தேரும் ,எப்பொழுதும் சினிமா சினிமா ,நாசமா போக பொது நம் சமுதாயம்
மோகன் சார், ஏதோ குத்து, கொலை என்று ரௌடித்தனம் பண்ணாமல் சினிமா பார்க்கிறானே அதற்காக நன்றி சொல்லுங்கள். ஏழை எளியவர்களுக்கு இது தானே பொழுது போக்கு!