ரஜினி அப்பா, தாத்தாவாக நடிக்கும் நேரம் வந்துவிட்டதா?

super star

சென்னை: ரஜினிகாந்த் தனது வயதுக்கேற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒன்இந்தியா வாசகர்களில் பலர் தெரிவித்துள்ளனர். வயது ஆனாலும் ரசிகர்களிடையே மவுசு குறையாமல் இருப்பவர் ரஜினிகாந்த். ஆனால் அண்மை காலமாக அவர் நடிக்கும் படங்கள் சரியாக ஓடுவது இல்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் அப்பா, தாத்தா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை படித்த ஒன்இந்தியா வாசகர்கள் எழுதிய கருத்துகளில் சில இதோ,

ஜாக்: மிகவும் சரி… உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்… அவரது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வாஞ்சி: அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும்… ஏன் நம்ம ஆளுங்க பீலிங் மட்டும் லேட்டா வருது??

ஆறைவு: ரஜினி இதற்கு மேலும் ஹீரோவாக நடிக்க முடியாது. அமிதாப்பை போல முக்கியத்துவமுள்ள வயதான கதாபாத்திரங்களை ரஜினி தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

 

முயா: லிங்கா எங்கடா தோல்வியை தழுவியது. வெற்றி படம் டா. வினியோகஸ்தர்கள் பேராசைக்கு ரஜினி என்னடா பண்ணுவாரு. அவரு போட்ட பிச்சைலதான் இப்ப பல படம் பல நாட்டுல ரிலீஸ் ஆகுது இதை யாராவது மறுக்க முடியுமா சொல்லுங்க.

ராஜ்: இளம் நாயகிகளுடன் நடிப்பது தனக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய தண்டனை என்று ரஜினி தெரிவித்துள்ளார். அதை பார்ப்பது ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

ரஜினி தனது ரசிகர்கள் தற்போது நடுத்தர வயது அல்லது வயதானவர்களாக உள்ளனர் என்பதை உணர வேண்டும். அவர் ரசிகர்களை புரிந்து கொண்டவர். அதனால் இதை அவர் நிச்சயம் புரிந்து கொள்வார். மேரா நாம் ஜோக்கர் படம் தோல்வி அடையும் வரை ராஜ் கபூர் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கொடுமைப்படுத்தினார். ரஜினி விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.