ஐ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமான காட்சிகளை வைத்த இயக்குநர் ஷங்கருக்கு திருநங்கை ஆயிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, இயக்குனர் ஷங்கர் ஒரு முன்னணி இயக்குனர் என்கிற அடையாளத்தோடு சமூக அக்கறை மிக்க கருத்தாக்கங்களை திரையில் வெளிபடுத்தியவர் என்கிற நினைப்பில் நான் படத்திற்கு சென்றேன்.
ஆனால் ஐ திரைபடத்தில் திருநங்கையை அறிமுகப்படுத்திய முதல் காட்சியே கிண்டலுடன் ஆரம்பித்தது. “ஊரோரம் புளியமரம்” என்ற பாடலுடன் கதாநாயகனும் அவன் நண்பனும் சேர்ந்து கிண்டல் செய்துள்ளனர்.
திருநங்கை கதாபாத்திரம் ஏதோ உடல் பசிக்கு மிகவும் அலைவது போலவும் விரசமாக பெண்களே முகம் சுளிக்கும் வகையில் காட்சிகள் அமைத்தது வேதனையானது.
திருநங்கையின் காதலை வெளிப்படுத்தி அதை மிகவும் அருவருக்கத்தக்க விடயம் போல கதாநாயகன் வெளிபடுத்துவதும் ” என்ன எழவுடா, என்ன கருமாந்திரம்.. ஏன் எச்சை பண்ற” (பொம்பளைங்க கொடுத்தா முத்தம், நாங்க கொடுத்த அது எச்சையா) இது போன்ற வசனங்களுடன் அடுத்தடுத்து காட்சி அமைத்து எங்களின் காதல் உணர்வை காயப்படுத்தியுள்ளது.
திருநங்கை அட்மிட் ஆன வார்டு எண் ஏன் 9 ஆக காண்பிக்க வேண்டும்…? ஷங்கருக்கு வேற எண் தெரியாதா?
இது வெறும் கதாப்பாத்திரம் தானே என்றாலும் திரையில் உள்ளதை பார்த்து தான் திருநங்கைகளை பற்றி எந்த புரிதல் இல்லாத ஆசாமிகள் ஓ இவங்க இப்படி தான் போல என்று நினைப்புக்கு வருவது எளிதான ஒன்று.
இந்த நினைப்பு எங்களை சமூதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கும். எனவே ஷங்கர் கனமான திருநங்கை கதாபாத்திரம் அமைத்து கடைசியில் படம் பார்க்க வரும் எங்களை வேதனைக்குள்ளாக்கிவிட்டார் என்பதே உண்மை என தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com
யானைக்கும் அடி சறுக்கும்! ஷங்கருக்கும் ஷாக் அடிக்கும்!
நாளைக்கு இவன் அடுத்த தலைமுறையிலோ இல்ல நெருங்கிய உறவுலயோ யாரும் திருநங்கை ஆனா தான் புத்தி வரும்.அவர்களின் வலி புரியும்.மடையன்….இது பருத்திவீரன் படம் எடுத்தவனுக்கும் தான்…திருநங்கைகளை அவமானப்படுத்தும் எல்லாருக்கும் தான்…
திருநங்கையை மாத்திரமென்ன, கதாநாயகியையும் செக்ஸ் உருவமாகத்தானே வெளிப்படுத்தியுள்ளார்…”கூனன்” பாத்திரத்தில் விக்ரமின் சிறந்த நடிப்பைக் காண முடியுமே தவிர “ஐ” திரைக்கதை “0”.
தமிழ் திரைப்பட டைரக்டர்களுக்கு யாரையாவது அல்லது வேறு மாநிலத்தவரை கேவலபடுத்த வில்லை என்றால் எண்ணம் ஓடாது போலும் . நான் கடவுள் முதல் முன்னும் பின்னும் பல தமிழ் படங்களை பார்த்து விட்டேன் . ஒரு தரப்பினரை கேவலபடுத்தி வரும் தமிழ் படங்கள் என்ணி பார்க்க பத்து விரல் பத்தாது. ஏன் வறுமையை ஏழ்மையை இயலாமையை நல்ல விதமாக சொல்லலாமே ? இந்த சங்கருக்கு அந்த பாத்திரத்தில் ஒரு பெண்ணையே நடிக்க வைத்திருக்கலாமே . இ தனால் தான் நான் தமிழ் படங்களை பார்ப்பது குறைவு .
என் மனதில் பட்டத்தை சொல்லுகிறேன்,,திருநங்கைகளை நாம் தெய்வமாக மதிக்க வேண்டும் ,நல்ல எண்ணத்தோடு அவர்களுடன் பழக வேண்டும் ,பணத்துக்காக சில தவறான காரியங்களில் ஈடுபடுகின்றனர் ,,ஆனால் நான் அவர்களை கண்டால் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு போவேன் ,அவர்கள் சொல்லுவார்கள் நாங்கள் உங்களை சந்தோஷ படுத்தாமல் பணத்தை வாங்க மாட்டேன் என்று ,,இருந்தால் நமக்கு அந்த சந்தோசம் தேவையா ….இவர்களை நாம் மதிக்க வேண்டும் ,,இவர்கள் சிவனுக்கு சமமானவர்கள்
சினிமாவை சினிமா என்று பார்க்காமல் நிஜம் என்று நினைத்து புலம்புவதை முதலில் நிறுத்துங்கள்.. இந்தியாவைப்போல் சினிமா பைத்தியம் பிடித்து அலையும் மாக்களை உலகில் வேறு எந்த நாட்டிலும் காண்பது அரிது. உன்னை அறிந்தால் உன் குடும்பம் உயரும் .. வெட்டித் தனமாக சினிமாவை பார்த்து புலம்புவதை நிறுத்தி உருப்படும் வழியை பார்ப்போம் …. எண்ணுவம் உயர்வு . வாழ்க தமிழ் , வளர்க தமிழ் , ஓங்குக தமிழர் வாழ்வு ……..