தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. கைவசம் நான்கைந்து படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஹன்சிகா.
இவர் சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நாம் அறிந்த விஷயம். இவர்கள் தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் ஆசையாம்.
அது தற்போது நிறைவேறும் தருவாயில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகா மும்பை அருகே வாடா என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்.
அழகாகவும் அமைதியாகவும் ஒரு இடம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்து அந்த இடத்தை வாங்கியிருக்கிறார். கூடிய விரைவில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி தான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகளை தங்க வைக்கவுள்ளாராம்.
-http://123tamilcinema.com


























இந்த நடிகையை பற்றி கேள்வி பட்டு இருக்கேன் ,,அழகான ,நடிகை அழகான மனசு ,,இவர் படங்கள் வெற்றி பெற்று மேலும் பல குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்
கொடுத்து வச்ச பிள்ளைக . யாருக்கு தெரியும் பிற்காலத்திலே அவர்கள் இவங்களுக்கு சோறு போடலாம்