தமிழக மக்கள் அனைவராலும் புரட்சி இயக்குனர் என்று புகழப்பட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவருக்கு பல பெருமைகள் உள்ளது. இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர் ஷங்கர் இவருடைய சிஷயர் தான். அதேபோல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இவருடைய மகன் தான்.
தன் மகன் களத்தில் கலக்கி கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் ஏன் அமைதியாக இருக்கனும் என்று அவரும் களத்தில் இறங்கிய படம் தான் டூரிங் டாக்கீஸ். ஒரு படம் இரண்டு கதை என தன் வித்தியாசமான கதைக்களத்துடன் இவர் இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
கதை
74 வயது ஆனாலும் இளமை எண்ணத்துடன் குடி, குத்தாட்டம் என இருக்கிறார் எஸ்.ஏ.சி. தன் பழைய காதலியின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வைத்து கொண்டும் இறப்பதற்குள் அவளை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று மனோபாலா உதவியுடன் சிம்லாவிற்கு தேடி செல்கிறார்.
அப்படி தேடிச்சென்ற தன் காதலியை அவர் பார்த்தாரா? என்பது தான் மீதிக்கதை. படத்தில் முதல் பகுதியில் இவருடையை கதை, இரண்டாம் பாதியில் தன் இளம் வயது கதை என்று இரண்டு வித்தியாசமான கதையை காட்ட முயற்சித்துள்ளார் எஸ்.ஏ.சி.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
எஸ்.ஏ.சி இந்த வயதிலும் மிகவும் எனர்ஜியாக நடித்திருக்கிறார். ஆனால், அவர் செய்யும் சில விஷயங்களை நம் மனம் ஏற்று கொள்ள தயங்குகிறது. நண்பராக வரும் மனோபாலா யதார்த்தமாக நடித்துள்ளார்.
ப்ளாஸ் பேக்கில் வரும் அந்த காதல் ஜோடிகள் இருவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்
ஜாதி கொடுமைகளை தைரியமாக கூறிய விதம் நன்றாக இருக்கிறது. இளையராஜாவின் பின்னணி இசை, இரண்டாம் பகுதி.
பல்ப்ஸ்
முதல் பகுதி மிகவும் ஜவ்வாக நீள்கிறது. பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் சாமனிய சினிமா ரசிகனுக்கும் தெரிந்து விடுகிறது. இரண்டாம் பாதியில் இடம்பெறும் மூஞ்சை சுழிக்கும் காட்சிகள்.
மொத்தத்தில் ஒரு முறை இந்த டூரிங் டாக்கீஸ்க்கு சென்று வரலாம்.
-http://www.cineulagam.com