ரஜினி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய பின் சில மாதங்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை.
அதன் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ படத்தில் நடித்தார். இது கடந்த மாதம் ரிலீசானது. இந்த படத்திலும் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு ‘லிங்கா’ பட வசூல் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார்.
தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் விரைவில் நஷ்டஈடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்துக்கான கதையிலும் ரஜினி கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அவரது புதுப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பி.வாசு, லிங்குசாமி ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. எந்திரன் 2–ம் பாகத்தில் இவர்கள் இணையப் போவதாக தகவல் பரவி உள்ளது.
ரஜினி படங்களில் எந்திரன் மெகா ஹிட் படமாக அமைந்தது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருந்தார். ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இந்த படம் ரூ.375 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தி, தெலுங்கிலும் வெளியாகி ரூ.45 கோடி வசூலித்தது.
இந்த படத்தின் 2–ம் பாகத்தை நிச்சயம் எடுப்பேன் என்று ஷங்கர் ஏற்கனவே கூறி இருந்தார். அதற்கான கதையையும் தயார் செய்துள்ளார். சமீபத்தில் ரஜினியும், ஷங்கரும் சந்தித்து பேசி ‘எந்திரன் 2–ம்பாகம்’ கதை பற்றி விவாதித்து உள்ளனர். எனவே இந்த படத்தில் ரஜினி நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-http://123tamilcinema.com
சங்கர் சார்…வர வர உங்கள் படங்களில் ‘பிர்மாண்டம்’ என்கிற ஒரு மாயயைத் தவிர வேறொன்றும் இல்லை. தயவு செய்று கவனியுங்கள். ரஜினி சார்…நீங்கள் இன்னும் இளமையானவர் என்கிற நினைப்பு உங்களுக்கு..ஆனால் அது தப்பு எனும் கணிப்பு எங்களுக்கு . உங்கள் கூடவே இருக்கும் சிலர் பாடும் துதியை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு தூர நின்று உங்கள் படங்களை விமர்சிக்கும் சிலரை கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கள்…வயதுக்கு ஏற்ற வேடம் போடச் சொல்லும் அவர்களின் கூற்றில் நியாயம் இருக்கிறதா என்று யோசியுங்கள். அதெல்லாம் முடியாது நீங்கள் இப்படித்தான் நடிப்பீர்கள் என்று முடிவு செய்தால் ‘ரஜினி’ என்கிற ‘மாயை’ விரைவில் மறைந்து போய் சிவாஜி என்கிற ‘ராவ்’ மட்டும் தான் எஞ்சியிருப்பார்.
அமாம் ,சங்கர் ,ரஜினி அவர்களே ,பல்லவன் சொல்வது உண்மைதான்,,சங்கர் சார் ,நீங்கள் எத்தனையோ ஆங்கில படம் பார்த்து இருப்பீர்கள் ,அதில் வயதான நடிகர்கள் james bond போன்ற வேஷங்களில் நடிக்கிறார்கள் ,jacky chan இன்னும் சண்டையிட்டு கொண்டு நடிக்கிறார்கள் ,இதையெல்லாம் ரசிகிரீர்களே சங்கர் சார் ,ரஜினியையும் கொஞ்சம் இளமையாக காட்ட வேண்டியதுதானே ,நிஜ வாழ்க்கையில் அவர் நடை பார்க்கும் பொது மிகவும் சுஸ்ருப்பாக தானே இருக்கிறார் ,சங்கர் சார் ,MGR படம் பார்த்தீர்களா சங்கர் சார் ,சுருக்கமாக சொல்லபோனால் அவர் கிழவர் தானே ,மதுரைய மீட்ட சுந்தர பாண்டியனை பார்த்தீர்களா சங்கர் சார் ,இதுக்கெல்லாம் கை தட்டுறேங்க்கள சங்கர் சார் ,ஏன்னா சார் நீங்க
ரொம்ப நக்கலாகத் துதி பாடியிருக்கிறீர்…வாழ்த்துக்கள்!
நன்றி பல்லவன்
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே வாழ்க!!
உங்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..