தமிழ் திரையுலகின் ‘மூத்த’ இசையமைப்பாளரை மோசமாக சித்தரிக்கிறதா ‘இசை’ திரைப்படம்?

isaicசென்னை: எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து வெளியே வந்துள்ள திரைப்படமான இசை, தமிழ் சினிமாவின் இரு முக்கிய இசையமைப்பாளர்களை பிம்பிப்பது போல எடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், அவரே நடித்து, இசையமைத்துள்ள திரைப்படம் இசை. மூத்த இசையமைப்பாளர் ஒருவர், திடீரென விஸ்வரூபம் எடுத்த இசையமைப்பாளரை பழிவாங்குவதுதான் கதை.

மூத்த இசையமைப்பாளர் வெற்றிச்செல்வன் கேரக்டரில் சத்யராஜும், இளம் இசையமைப்பாளர், ஏ.கே.சிவா, வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். தமிழ் திரையுலகின் ‘மூத்த’ இசையமைப்பாளரை மோசமாக சித்தரிக்கிறதா ‘இசை’ திரைப்படம்? தமிழ் சினிமாவின் உள்குத்து வேலையை காட்டுவதாக நினைத்துக் கொண்டு, மூத்த இசையமைப்பாளர் கேரக்டரை கடுமையாக டேமேஜ் செய்துள்ளார் இயக்குநர்.

படம் பார்ப்பவர்களுக்கு நிஜத்தில் அவர் எந்த இசையமைப்பாளரை இவ்வாறு தாக்குகிறார் என்பது நன்கு தெரியும் வகையில் காட்சிகள் உள்ளன. உதாரணத்துக்கு, மூத்த இசையமைப்பாளர், பூஜை, புணஸ்காரத்தில் மிகுந்த ஈடுபாடுடன் உள்ளவர் என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப, ஹீரோ கேரக்டரை, ஏ.ஆர்.ரஹ்மானாக உருவகப்படுத்த மிகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர்.

ஏ.கே.சிவா என்ற கேரக்டரின் இன்ஷியலே, ஏ.ஆர். ரஹ்மானின் இன்ஷியலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி, இசைப்புயல் என்ற அடைமொழிக்கு பதிலாக, இதில் இசை கடல் என்ற அடைமொழி, அந்த கேரக்டருக்கு தரப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் ‘மூத்த’ இசையமைப்பாளரை மோசமாக சித்தரிக்கிறதா ‘இசை’ திரைப்படம்? ஓ.கே., ஹீரோ கேரக்டர் ரஹ்மான் என்றால், வில்லனாக சித்தரிக்கப்படும் மூத்த இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்த பிறகு வாய்ப்புகள் குறைந்து போனது எந்த இசையமைப்பாளருக்கு? என்ற கேள்விகள், ரசிகர்கள் மனதில் தொக்கி நிற்கின்றன.

வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த மூத்த இசையமைப்பாளரின் ரசிகர்களை இந்த திரைப்படம் கோபப்படுத்தியுள்ளது. ஒருவகையில், மூத்த இசையமைப்பாளர் ஒருவரை மிகவும் மோசமாக லைம்லைட்டில் நிற்க வைக்கும் முயற்சி படத்தில் தெரிவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது, சரி.. எஸ்.ஜே.சூர்யாவுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமா என்ன?

tamil.filmibeat.com