கன்னடம், தெலுங்கில் ‘யாரிவசை’ என்ற சர்ச்சை படம் தயாரானது. போலி சாமியார்கள் ஆபாச வக்கிரம செயலை மையப்படுத்தி இந்த படத்தை நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு நித்யானந்தா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படத்தை வெளியிடக்கூடாது என்றும் எதிர்த்தனர். இந்த பிரச்சினை கர்நாடக ஐகோர்ட்டுக்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்தார்.
இதையடுத்து கர்நாடாகாவிலும் ஆந்திராவிலும் தமிழ், தெலுங்கில் இந்த படம் ரிலீசானது. தற்போது யாரிவசை படத்தை தமிழில் சொர்க்கம் என் கையில் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இதை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தமிழ் நாட்டில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான மதன் பட்டேல் புகார் கூறியுள்ளார்.
நித்யானந்தாவை சித்திரித்து இந்த படம் எடுக்கவில்லை என்றும் 5 போலி சாமியார்களை படத்தில் சொல்லி உள்ளேன் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் படத்தை எடுக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரது வேண்டுகோள் போலீஸ் தரப்பில் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை.
மிரட்டல் காரணமாக இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. தயாரிப்பாளரே நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள்.
-http://123tamilcinema.com
அம்பி மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரா .