கார்த்திக் நடத்தும் ஐடி கம்பெனியில் அமைரா சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். வித்தியாசமான வீடியோ கேம்களை உருவாக்குவதற்காக ஒரு குழு ஒன்றை அமைத்து அதில், பணிபுரியும் அனைவருக்கும் கற்பனைத் திறன் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ஒருவித மாத்திரை கொடுக்கப்படுகிறது.
அந்த மாத்திரையை சாப்பிடுபவர்கள் தங்கள் மனதுக்குள் எழும் கற்பனைக் கதையை வெளிப்படுத்துகின்றனர். அந்த கற்பனைக் கதையை தனது வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி லாபம் பார்க்கிறார் கார்த்திக். இந்த மாத்திரை நாயகி அமைராவுக்கும் கொடுக்கப்படுகிறது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவளது முன்ஜென்ம வாழ்க்கை அவளது கண்முன் விரிகிறது. அதன்படி, முன்ஜென்மத்தில் பர்மாவில் தனுஷும், அம்ரியாவும் காதலர்களாக வலம் வந்ததும், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைராவின் அப்பா தனுஷை கொன்றதும், அந்த வேதனையில் அமைரா தற்கொலை செய்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது.
அடுத்த ஜென்மத்திலும் தனுஷும், அமைராவும் காதலர்களாக வலம் வந்ததும், இவர்களது காதல் திருமணம் வரை சென்றபோது, செல்வந்தர் ஒருவரால் இருவரும் கொலை செய்யப்பட்டதும் இவளது நினைவில் வருகிறது.
இந்த நினைவுகளில் வருபவர்கள் எல்லாம் நிகழ்காலத்திலும் தன்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர்வு நாயகிக்கு ஏற்படுகிறது. அனைவரையும் தேடி கண்டுபிடிக்கும் நாயகி, கடைசியில் தனுஷையும் கண்டுபிடித்து, அவளுக்கு தன்னுடைய நினைவில் வந்த முன்ஜென்ம கதைகளை கூறுகிறாள். ஆனால், தனுஷ் அதை ஏற்க மறுக்கிறார்.
ஒருகட்டத்தில் அமைரா கூறுவது கற்பனை கதைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தனுஷ், அவை எல்லாம் நிஜத்திலும் நடப்பதை உணர்கிறார். இதையடுத்து, அவள் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்று நம்பி, அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.
ஒருநாள் அந்த ஐடி கம்பெனியில் மர்மமான முறையில் ஒரு பெண் இறந்துபோகிறாள். இதற்கு அந்த கம்பெனியில் கொடுக்கும் மாத்திரைதான் காரணம் என்பதை கண்டறிகிறார் தனுஷ். இதனால், தனுஷை தீர்த்துக்கட்ட கார்த்திக் முடிவு செய்கிறார்.
இறுதியில், இவர்களின் சதி திட்டத்தை தனுஷ் முறியடித்து, நிகழ்காலத்திலாவது தனது காதலியை கைப்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இப்படத்தில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்துக்கு படம் புதுமையாக செய்யவேண்டும் என்று நினைக்கிற தனுஷுக்கு இப்படத்தில் சரியான தீனி.
மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களிலும் இவர் செய்யும் காதல் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறது. இரண்டாவது ஜென்ம கதையில் வரும் தனுஷின் கெட்டப் அசத்தலாக இருக்கிறது. நடிப்பிலும் துள்ளலை ஏற்படுத்தியிருக்கிறார். டங்காமாரி பாடலில் இவருடைய டான்ஸ் அனைவரையும் துள்ளி எழ வைக்கிறது.
அமைரா தஸ்தூர், 14 வயது பள்ளி மாணவி, 25 வயது ஐடி மாடர்ன் பெண் இரண்டிலும் அசத்தலாக நடித்திருக்கிறார். கதை முழுவதும் இவரைச் சுற்றியே நகர்வதால், அழகு பதுமையாக இல்லாமல் நடிப்பிலும் தனது திறமையை காட்டியிருக்கிறார்.
அயன் படத்தைவிட இந்த படத்தில் ஜெகனுக்கு சற்று பொறுமையான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து கைதட்டல் பெறுகிறார்.
முதல் பாதியில் கார்த்திக்கின் நடிப்பு அபாரம். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் நடிப்பில் மெருகேற்றியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல், ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பும் படத்தில் பெரிதும் பேசப்படும்.
முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுத்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். தமிழுக்கு கொஞ்சம் புதிரான கதையை கொடுத்து பரபரப்பாக நகரும் காட்சிகளை அமைத்து அருமையான காதல் கதையாய் உருவாக்கியிருக்கிறார்.
பர்மாவில் ஏற்படும் ராணுவ புரட்சி காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், ஒரு திரில்லர் படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அபாரம். டங்காமாரி ஊதாரி திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகிறது.
பின்னணி இசையிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் அழகாக இருக்கிறது. கிளைமாக்சில் மூங்கில் கட்டைகள் மீது நடக்கும் சண்டைக் காட்சியில் இவரது ஒளிப்பதிவு பலே.
மொத்தத்தில் ‘அனேகன்’ அமோகமாக வருவான்.
-http://123tamilcinema.com
விஜய் டிவி யும்
அதை
தான்
சொன்னது
படம்
நன்றாக உள்ளது எ
ன்று
பழைய படம் நெஞ்சம் மறப்பதில்லை ,அதே போல இருந்தது இந்த கதையும் ,உண்மையிலேயே சூப்பர் படம்
அனேகன் – பலருக்கும் சினேகன்.