தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அனேகன்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அமைரா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அனேகன்’ 3 நாட்களில் ரூ.30கோடியை வசூலித்துள்ளது. இந்த வசூல் தெலுங்கு பதிப்பை தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி… நன்றி… நன்றி… வருகிற 20-ந் தேதி ‘அனேகன்’ தெலுங்கு பதிப்பான ‘அனேகடு’ வெளியாகவிருக்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடந்த 6-ந் தேதி வெளியான ‘ஷமிதாப்’ படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது ‘அனேகன்’ படமும் வசூலில் முன்னணியில் வருவதால் தனுஷ் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.
தற்போது, இவரது அடுத்த வெளியீடாக ‘காக்கிச்சட்டை’ படம் பிப்.27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது ‘மாரி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
-http://123tamilcinema.com


























படத்தில் எடிட்டிங் வேலைகளில் குழப்பங்கள். ஒரு ஜென்மத்தை வைத்தே கதையை அழகுப்படுத்தி இருக்கலாம். ஆரம்பம் அட்டகாசமாக இருந்தது. பழைய கார்த்திக் காதல் வெறி நியாயமானதே ! கார்த்திக் சுப்பரா நடித்து இருந்தார். தனுசு கொஞ்சம் உப்பலாம்.