தமிழ் சினிமாவிற்கு அங்காடி தெரு, வெயில், காவியத்தலைவன் போன்ற தரமான படங்களை தந்தவர் வசந்தபாலன். இவர் சமீபத்தில் தன் பேஸ்புக் பக்கத்தில் மிகவும் மனவருத்ததுடன் நான் செய்த தவறுகள் என சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதில், ’1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
4.நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது
13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது
14.ன் என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது
18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது
இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன, ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி’ என பதிவு செய்துள்ளார்.
-http://www.cineulagam.com