நஷ்டமடைந்த தயாரிப்பாளருக்கு உதவி: ஆர்யா, அனுஷ்கா சம்பளத்தை குறைத்தனர்

aryaanushkaநஷ்டமடைந்த தயாரிப் பாளருக்கு உதவ ஆர்யாவும், அனுஷ்காவும் சம்பளத்தை குறைத்தனர்.

இருவரும் ஏற்கனவே இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து இந்த படத்தை எடுத்தனர். செல்வராகவன் இயக்கினார். பி.வி.பி. சினிமா தயாரித்தது. 2013–ல் இப்படம் ரிலீசானது.

தெலுங்கிலும் வர்ணா பெயரில் இதை வெளியிட்டனர். ரூ.65 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படம் தோல்வி அடைந்ததால் ரூ.30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின.

தற்போது இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் எடுக்கும் ‘சைஸ் ஜீரோ’ என்ற படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் இணைந்து நடிக்கிறார்கள்.

நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக இருவரும் தங்கள் சம்பளத்தில் பெரும் பகுதி தொகையை விட்டு கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். முந்தைய படங்களில் வாங்கியதை விட குறைவான சம்பளம் தந்தால் போதும் என்று கூறி இருக்கிறார்களாம்.

-http://123tamilcinema.com