தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளின் பெருமை சொல்லும் ‘கில்லி பம்பரம் கோலி’

gilli-bambaram-goliதமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி போன்றவற்றின் பெருமையைச் சொல்லும் வகையில் ஒரு படம் உருவாகிறது.

அப்படத்துக்கு கில்லி பம்பரம் கோலி என்றே பெயரிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தை மனோஹரன் என்பவர் இயக்குகிறார். இதற்கு முன் அஞ்சலி – நாசர் நடித்த மகாராஜா படத்தை இயக்கியவர்.

ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் இந்தப் படத்தை முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

கதாநாயகர்களாக நரேஷ், பிரசாத், தமிழ் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக புதுமுகம் சந்தோஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக தீப்திஷெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடமேற்கிறார்கள். நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சினேகன், மனோஹரன் பாடல்களுக்கு ஒய்ஆர் பிரசாத் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மனோஹரன்.

 

படம் பற்றி இயக்குனர் மனோஹரன் என்ன சொல்கிறார்? ”

நமது பாரம்பர்ய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்கள் இன்றைய நவீன யுகத்தில் மறைந்து கொண்டிருக்கின்றன. தெருவில் இறங்கி விளையாடுவது என்பது இன்று குறைந்து விட்டது. செல்போன் டெலிவிஷன், இன்டர்நெட் போன்ற நவீனங்கள் தெரு விளையாட்டை மாற்றி விட்டது. கிரிகெட், புட்பால், ஹாக்கி போன்ற நவீன விளையாட்டுக்கள் கில்லி, பம்பரம் கோலி போன்ற விளையாட்டின் சக்தியை குறைத்து விட்டது.

 

கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டை முழுமையாக உணர்ந்து எக்ஸ்பர்ட்டான நான்கு பேர் தொழில் நிமிர்த்தமாக மலேசியா சென்று அங்கே உருவான ஒரு பிரச்சனைக்கு இந்த விளையாட்டுக்களைப் பயன்படுத்தி எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது கதை!

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த விளையாட்டுகள் அந்த நால்வரின் வாழ்க்கைக்கு எப்படி உபயோகமாகிறது என்பதை கலகலப்பாக உருவாக்கி உள்ளோம்,” என்றார் இயக்குனர்.

படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது. இன்று காலை படத்தின் பூஜை சென்னை ஏவி எம் பிள்ளையார் கோயிலில் நடந்தது.

-http://tamil.filmibeat.com