சி2எச்சில் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை 10 லட்சம் டிவிடிகள் விற்பனை!

Director seranவீடுகளில் நேரடியாக சினிமாவை வெளியிடும் சேரனின் சி2எச்- முறையில் வெளியிடப்பட்ட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ முதல் நாளில் 10 லட்சம் டி.வி.டிக்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.

மார்ச் 5-ம் தேதி தமது நீண்ட நாள் திட்டமான சி2எச்-ஐ தொடங்கினார் இயக்குநர் சேரன். திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் படங்களை வீடுகளிலே அதிகாரபூர்வமாக டி.வி.டிக்கள் மூலம் கொண்டு போய் சேர்ப்பதே சி2எச் திட்டத்தின் நோக்கமாகும்.

சி2எச்சில் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை 10 லட்சம் டிவிடிகள் விற்பனை! இத்திட்டத்தில் முதல் படமாக சேரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ வெளியிடப்பட்டது.

முதல் நாளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான டிவிடிக்கள் விற்பனையாகி சாதனை படைத்தததாக இயக்குநர் சேரன் செய்தித்தாள் விளம்பரங்களில் அறிவித்துள்ளார். முதல் படத்துக்கே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் இயக்குநர் சேரன் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

இன்னும் ஒரு பெரிய படத்தை இந்த சி2எச் மூலம் வெளியிட்டால் போதும், மோசடிக் கணக்கு காட்டும் தியேட்டர்கார்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் தப்பித்துவிட முடியும் என்கிறார்கள் திரைத்துறையினர்.

இயக்குநர் சேரனின் சி2எச் முயற்சிக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தைத் தொடர்ந்து ‘அர்ஜுனனின் காதலி’, ‘அப்பாவின் மீசை’, ‘ஆவி குமார்’ உள்ளிட்ட 50 படங்கள் சி2எச் மூலம் வெளியாகப் போவதாக சேரன் அறிவித்துள்ளார்.

கிராமப் புறங்களில் இன்னும் இந்தத் திட்டம் பரவலாக அறியப்படாமல் உள்ளதாகவும், அங்கும் டிவிடிகள் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்தால் இந்தத் திட்டம் பெரும் வெற்றிப் பெறும் என்கிறார்கள் இந்தத் திட்டத்தின் முகவர்கள் சிலர்.

http://tamil.filmibeat.com