![]()
சுந்தர்.சி – கவுண்டமணி என்றாலே நகைச்சுவையில் செம்ம விருந்து இருப்பது உறுதி.
அவர்கள் கூட்டணியில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா , மேட்டுக்குடி போன்ற படங்கள் இன்றளவும் ரசிக்க படுவது மறுக்க முடியாத உண்மை.
நடுவில் சற்று ஓய்வு எடுத்த கவுண்டர் இப்போது 49 ஒ மற்றும் வாய்மை போன்ற படங்களில் மூலம் மறுபடியும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருகிறார் . ஒரு பிரபல தயாரிப்பாளர் சுந்தர்.சி -கவுண்டமணி கூட்டணியை மீண்டும் இணைக்க விரும்பினார்.
இது பற்றி சுந்தர் .சி யிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் ஓகே சொல்ல மலையாளத்தில் வெற்றி அடைந்த வெள்ளிமுங்கா என்ற அரசியல் படத்தை எடுக்க திட்டமிட்டனர். அதன் பிறகு பேச்சுவார்த்தை கவுண்டமணியிடம் நடத்தினார்களாம்.
ஆனால் அவர் இந்த சப்ஜெக்ட் இப்போ செட் ஆகாது நானும் சத்யராஜும் நிறைய அரசியல் கலந்த படங்களை முன்பே செய்து விட்டோம் என்றும் அதுவும் நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தாராம்.
-http://www.cineulagam.com

























