தமிழ் சினிமாவாக இருக்கட்டும், உலக சினிமாவாக இருக்கட்டும் இவை இரண்டுமே பிறந்தது ஒரு நாடக மேடையில் தான். முதல் முதலாக மேடையில் நாடகங்களாக அரங்கேறியது தான் இன்று செல்லுலாயிட் வரை வந்து நிற்கிறது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் உலகில் சிறந்து விளங்கும் அனைத்து கலைஞர்களும் இந்த மேடையில் இருந்து வந்தவர்களே.
ஏன்? நம் தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் சிவாஜி, எம்.ஜி.ஆர், சுந்தராம்பால், மனோரமா என ஆயிரக்கணக்கான சாதனை கலைஞர்கள் மேடையில் நடித்து பின் திரையில் தோன்றியவர்களே. கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் ஆகியோரின் நகைச்சுவை நாடகம் மட்டும் இன்றளவும் ரசிக்கப்படுபவை.
ஆனால், இன்று யாரும் மேடை நாடகங்களை விரும்புவதில்லை, உலகமே கமர்ஷியலுக்குள் மாட்டிக்கொண்ட நேரத்தில், ஐரோப்பிய நாடுகளில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இதற்கு மரியாதை உள்ளது.
நம் நாட்டின் விடுதலைக்கே பல மேடை நாடகங்கள் தான் உதவியது. ஆனால், இன்று பணக்கார வர்க்கம் சென்று கைத்தட்டும் ஒரு இடமாகவே இது உள்ளது. அதிலும் கூத்து கலைஞர்களுக்கு எங்கும் மரியாதை இல்லை.
இதை சமீபத்தில் வந்த கள்ளப்படம் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படி நம்மை தொடர்ந்து பல வருடங்களாக மகிழ்வித்து வரும் மேடை நாடக கலைஞர்களை World Stage Artist Day ஆன இன்று நினைவு கூர்வோம்.
-http://www.cineulagam.com