ஏக பிரச்சினைகளுக்கிடையில் கடந்த வாரம் வெளியான கொம்பன் படத்துக்கு இன்று வெற்றிவிழா கொண்டாடினர் தயாரிப்பாளரும் இயக்குநரும். கார்த்தி-லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்த இந்தப் படம் பல்வேறு அரசியல் எதிர்ப்புகளுக்கு உள்ளானது.
சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன் கொம்பன் படத்தை வெளியிடாமல் தடுக்க வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் அனைத்திலும் வென்று வெளியானது படம். ரசிகர்கள் படத்துக்கு ஏக ஆதரவை வழங்கினர். நல்ல வசூல்.
இதைக் கொண்டாடும் வகையில் இன்று படக்குழுவினர் பிரசாத் லேப் தியேட்டரில் கூடினர். சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன் நடிகர் சூர்யா, இயக்குனர் முத்தையா, தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
படத்தை பெரிய வெற்றியடைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன் குறிப்பாக மீடியாவுக்கு மிகப் பெரிய நன்றி என்றார் ஞானவேல் ராஜா.
நடிகர் கார்த்தி பேசுகையில், “கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தப் படத்தைப் பார்த்து வருகின்றனர். ஒரு அழகான குடும்பப் படத்தில் நடித்ததற்காக எனக்கு நன்றி கூறுகின்றனர். படத்தைப் பாராட்டி வரும் விமர்சனங்களைப் படிக்கும்போது மிக நெகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். முன்னதாக நடிகை கோவை சரளா கேக் வெட்டி வெற்றி விழாவை தொடங்கி வைத்தார்.



























