பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96.
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனிபா. இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது அவரது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.
பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடத் தொடங்கிய ஹனிபா, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியும், இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். வெளிநாடுகளிலும் அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசு உண்டு.
‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘நட்ட நடு கடல் மீது’ ‘உன் மதமா என் மதமா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் அவருக்கு சிறப்பு சேர்த்தன. ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இன்று காலமான நாகூர் ஹனீபா உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-http://123tamilcinema.com
தமிழ் உலகத்திற்கு பெரும் இழப்பு….
தமிழர்களின் இரண்டு ஆளுமைகள்
இரண்டு பெருமைகள் சரிந்தது…..
நாகூர் ஹனிபா
ஜெயகாந்தன்.
தமிழர்களின் இரண்டு ஆளுமைகள்
இரண்டு பெருமைகள் சரிந்தது…..நாகூர் ஹனிபா,ஜெயகாந்தன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
தெலுங்கு சின்னமேளம் தட்சணா மூர்த்தி கட்சிக்காக நாகூர் ஹனிபா
தன் கணீர் குரலால் கழக வெற்றிக்காக எழுச்சி பாடல்கள் பாடி பாடுபட்டவர் .. அட்டைபோன்று பயனுள்ளவை பயன்படுத்திவிட்டு ஒதுக்கியவன் இந்த குடுகுடுப்பை வந்தேறி திருடர் முன்னேற்றகழகம் .
இறக்குமுன் பலவருடங்களாக எந்த உதவியுமற்று வறுமையில் வாடினார் .. கோமளவல்லியின் பேனரை கிழித்தெறியும் ட்ராபிக் ராமசாமி என்றளைக்கபடும் ஒருதேளுங்கு கிழவனை வைத்தியசாலைக்கு போய் நலம்விசாரிக்கும் கருணாநிதியின் மகன் சுடாலின் தன் திருட்டு கலகதிட்காக பாடி பாடி பலபடுதிய பெரியவர் நாகூர் கனிபா அதே மருத்துவமனையில் நோய்வாய்பட்டு தன்கியிருந்தவரை நலம் விசாரிக்க மனம் வரவில்லை .. நாகூர் ஹனிபா ஒரு தமிழன் …ட்ராபிக் ராமசாமி தன் வடுக இனம் .. தமிழா சாதி மதம் கடந்து ஒன்றுபடு தமிழனாக ..
irandu thuruvangal maraithana!
தமிழர் எழுச்சி பறை உங்கள் கருத்து உண்மையானது…
நம் முத்தமிழுக்கு இன்று இரண்டு இழப்புகள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இவர் தமிழுக்கு தொண்டு செய்தவரா? எதில்? அல்லது தனது மத வளர்ச்சிக்காக பாடுபட்டவரா? சுயநலவாதிகளுக்கு எல்லாம் கொடி பிடிக்க முடியாது……..!!!! ஜெயகாந்தன் அவர்களால் உலக தமிழர்கள் பயனடைந்தார்கள். இங்கே சொல்லிக் கொள்ள ஒன்னும் இல்லை…
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை, பெண்களுக்கே தலைவியான பாத்திமா – இந்த பாடல்களையெல்லாம் மறக்க முடியாது.