தொல்லை தாங்காமல் மிஷ்கின் வெளியிட்ட அறிவிப்பு

தொல்லை தாங்காமல் மிஷ்கின் வெளியிட்ட அறிவிப்பு - Cineulagam

கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்தது மிஷ்கினின் பிசாசு. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததையொட்டி தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் மிக தீவிரமாக இருக்கிறார்.

இந்நிலையில் நாளுக்கு நாள் அவரது அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு வரும் கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் அவர் கதை விவாதத்தில் இருக்கும் போதே வாய்ப்பு கேட்டு வருபவர்கள் வருவதால் தொல்லை தாங்காமல் ஒரு பலகையை தனது அலுவலகம் முன்பு மாட்டி விட்டார்.

அதாவது என்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகள் செப்டெம்பரில் தான் தொடங்க உள்ளது. அதன் பிறகு வாய்ப்பு கேட்டு வருபவர்கள் வரவும் என்று அறிவிப்பை மாட்டி விட்டார்.

-http://www.cineulagam.com