தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று போராடும் இளைஞர்களுக்கான படம் தான் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஆனால், இதில் நல்லதை மட்டும் காட்டவில்லை, பிழைக்க வந்த இடத்தில் தன் லட்சியத்தை விட்டு திசை மாறும் இளைஞர்களின் வாழ்க்கையையும் காட்டியுள்ளது.
இதில் குறிப்பாக சினிமாவில் இயக்குனரக வேண்டும் என்று போராடும் இளைஞர்களாக நடித்த பாபி, பிரபன்ஜெயன் அப்படியே அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர். கொசு கடியில் தூங்குவதில் ஆரம்பித்து, தன் அண்ணன் மகனின் ஆசையை நிறைவேற்ற போராடுவது வரை மிக துள்ளியமாக படம்பிடித்துள்ளனர்.
சென்னையில் ரூம் இல்லாமல் ஒரு இரவில் படும் கஷ்டத்தை இதற்கும் முன்னும் சரி, பின்னும் சரி வேறு எந்த படங்களிலும் இப்படி காட்டியது இல்லை, இப்படி நேர்மையாக, உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த மருதுப்பாண்டியன் மற்றும் படக்குழுவினர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
-http://www.cineulagam.com
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தின் விமர்சனத்தை பார்க்க க்ளிக் செய்க