புன்னகை பூ படத்தில் நடித்தவர் கீதா. அதிலிருந்து அப்பட பெயரும் அவரது நிஜ பெயருடன் ஒட்டிக்கொண்டது. இடையில பட தயாரிப்பில் ஈடுபட்டவர் தற்போது ‘காவல்’ படம் மூலம் மீண்டும் ஹீரோயினாகி இருக்கிறார்.
விமல் ஹீரோ. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் நாகேந்திரன் கூறியது:கல்லூரியில் படித்தபோது பிஎச்டி ஆராய்ச்சிக்காக கூலிப்படை என்ற சப்ஜெக்ட்டை எடுத்தேன். அதற்காக நிஜமாகவே கூலிப்படையில் இருப்பவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். அதன் பாதிப்புதான் இப்படம்.
இயக்குனர் சமுத்திரக்கனி எனக்கு நெருங்கிய நண்பர். அவரை இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயன்றேன். ஆனால் அவர் என்னிடம் பிடிகொடுக்காமல் இருந்தார். வற்புறுத்தி உட்கார வைத்து கதை சொன்னபோது ஒப்புக்கொண்டார்.
இதில் விமல் ஜோடியாக புன்னகைப்பூ கீதா நடிக்கிறார் என்றபோது பலரும் பலவிதமாக பேசினார்கள். ஆனால் அவர்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. டூப் போடாமல் அவரே நடித்தார். இதனால் நிறைய அடியும் அவருக்கு பட்டது.
அடுத்த படம் இயக்கினாலும் அவர்தான் என்படத்தில் ஹீரோயின்.இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.
-cinema.dinakaran.com

























